இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி படைக்கவுள்ள 5 சாதனைகள் – லிஸ்ட் இதோ

Kohli
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க, இந்த மாத இறுதியில் இங்கிலாந்திற்கு செல்லவிருக்கிறது இந்திய டெஸ்ட் அணி. இதில் நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியானது ஜூன் மாதம் 18ஆம்தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்கவிருக்கிறது. மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பல்வேறு விதமான சாதனைகளை படைக்க இருக்கிறார். அவர் படைக்க இருக்கும் சாதனகளின் பட்டியலை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

kohli

- Advertisement -

ரன்களின் அடிப்படையில் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளபோகும் விராட் கோலி:

91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 7490 அடித்திருக்கிறார். இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால், டெஸ்ட் ஜாம்பவான்களான கிளைவ் லாய்ட் (7,515 ரன்கள்), மார்க் டெய்லர் (7,525 ரன்கள்), முஹம்மது யூசுப் (7,530 ரன்கள்) ஆகியோரை முந்திச் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் கோலிக்கு இணையாக விளையாடி வரும், ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித்தையும் அவர் முந்தி செல்வார். ஸ்டீவ் ஸ்மித் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 7,540 ரன்கள் அடித்திருக்கிறார்.

டெஸ்ட் சதங்கள்:

- Advertisement -

27 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால், மைக்கேல் கிளார்க் (28 சதங்கள்), மற்றும் ஹசிம் ஆம்லா (28 சதங்கள்) ஆகியோரை கடந்து செல்வார் என்பதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட்டின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனுடன் சமநிலையில் இருப்பார். டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli

கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகள்:

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இதுவரை 60 போட்டிகளில் செயல்பட்டு, 36 வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். இன்னும் ஒரு போட்டியில் அவருடைய தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றால், வெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கிளைவ் லாய்டை விட, அதிக வெற்றிகள் பெற்ற கேப்டனாக கோலி இருப்பார். க்ளைவ் லாய்டும் 36 போட்டிகளில் வெஸ்ட் அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்.

கேப்டனாக அதிக ரன்கள்:

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி 5,392 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 608 ரன்கள் அவர் அடித்தால், கேப்டனாக செயல்பட்டு 6,000 ரன்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்.

Kohli-3

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான சாதனை:

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2,000 ரன்கள் அடிக்க கோலிக்கு இன்னும், 258 ரன்கள் தேவை. அப்படி அவர் 2,000 ரன்களை அடித்தார் என்றால், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2,000 ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனயைப் படைப்பார். நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்தால், அந்த அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் சமநிலையில் இருப்பார். சச்சின் 4 சதங்களை நியூசிலாந்திற்கு எதிராக அடித்துள்ளார்.

Advertisement