IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக் மற்றும் மேத்யூ ஹைடனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த – கிங் கோலி

Kohli-Sehwag-Hayden
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 500-ஆவது போட்டியில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி தற்போது முதல் இன்னிங்ஸின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 87 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக களத்தில் இருக்கிறார்.

Kohli

- Advertisement -

இதனை தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில் மேலும் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முன்னாள் இந்திய வீரரான சேவாக் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ ஹைடனின் சாதனையையும் கடந்து விராட் கோலி அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது 32 ரன்களை எடுத்த போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இந்திய வீரராக ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

Kohli

இதற்கு முன்னதாக 8,586 ரன்கள் அடித்து அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இந்திய வீரராக ஐந்தாவது இடத்தில் சேவாக் இருந்த வேளையில் நேற்று அந்த சாதனையை விராட் கோலி கடந்தார். அதுமட்டும் இன்றி உலக அளவில் மேத்யூ ஹைடன் 8,625 டெஸ்ட் ரன்களை குவித்திருந்த வேளையில் அவரது ரன்களையும் கடந்தார்.

- Advertisement -

விராட் கோலி மொத்தம் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,642 ரன்கள் குவித்துள்ளார். அதில் இதுவரை 28 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அளித்த வீரர்களின் பட்டியலில் :

இதையும் படிங்க : வீடியோ : மீண்டும் சதமடிக்க கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரோஹித் சர்மா – விரக்தியில் என்ன பண்ணீருக்காரு பாருங்க

சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதலிடத்திலும், டிராவிட் 13288 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், வி.வி.எஸ் லட்சுமணன் 8781 ரன்களுடன் நான்காவது இடத்திலும், விராட் கோலி தற்போது 8,642 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement