IND vs WI : 500வது போட்டியில் வரலாறு படைத்த கிங் கோலி – லாராவை மிஞ்சி சச்சினின் மற்றுமொரு உலக சாதனையை உடைத்து அபாரம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு மீண்டும் 139 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்த யசஸ்வி ஜெயிஸ்வல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் வந்த சுப்மன் கில் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த ரகானே 8 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றியதால் இந்தியாவும் 182/4 என லேசான தடுமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

கிங் கோலியின் உலக சாதனை:
அப்போது மறுபுறம் களமிறங்கியிருந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக செயல்பட்டு சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற சாதனையுடன் பேட்டிங் செய்த விராட் கோலி கடந்த போட்டியை போல் தடுமாறாமல் இம்முறை சிறப்பாக செயல்பட்டு உலகிலேயே தங்களுடைய 500வது சர்வதேச போட்டியில் அரை சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார்.

நேரம் செல்ல செல்ல கொஞ்சமும் தடுமாறாமல் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் பவுண்டரியுடன் 100 ரன்களை கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்து ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது 11 பவுண்டரியுடன் 121 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே

- Advertisement -

மறுபுறம் அசத்திய ரவீந்திர ஜடேஜா 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததால் 2வது நாள் உணவு இடைவெளியில் 373/6 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இந்த போட்டியில் வலுவாகவே செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் 121 ரன்கள் எடுத்த விராட் கோலி 2018க்குப்பின் 5 வருடங்கள் கழித்து வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக தன்னுடைய டெஸ்ட் சத்தத்தை அடித்தார். மேலும் சர்வதேச அரங்கில் தன்னுடைய 76வது சதத்தை பதிவு செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29வது சதத்தை அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சதங்களை சமன் செய்தார்.

1. அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளின் முடிவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 76*
2. சச்சின் டெண்டுல்கர் : 75
3. ரிக்கி பாண்டிங் : 68
4. ஜேக் காலிஸ் : 60

- Advertisement -

2. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற ஜேக் காலிஸ் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. சுனில் கவாஸ்கர் : 13
2. ஜேக் காலிஸ்/விராட் கோலி : தலா 12
3. ஏபி டீ டிவில்லியர்ஸ் : 11

3. அது போக சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 76 சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 559 இன்னிங்ஸ்*
2. சச்சின் டெண்டுல்கர் : 587 இன்னிங்ஸ்

இதையும் படிங்க:IND vs WI : 29 ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி அவுட் ஆவது – 3ஆவது முறையாம்

4. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 44
2. ஜேக் காலிஸ் : 35
3. மகிளா ஜெயவர்த்தனே : 30
4. விராட் கோலி : 25*
5. பிரையன் லாரா : 24

Advertisement