- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினை சமன் செய்தும் மிஞ்சியும் கிரிக்கெட்டின் கிங்’காக விராட் கோலி படைத்த 3 புதிய உலக சாதனைகள்

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 390/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் சதமடித்து 116 ரன்கள் எடுக்க நம்பிக்கை நாயகன் விராட் கோலி சதமடித்து 166* ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார்.

அதை தொடர்ந்து 392 ரன்கள் துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே இந்தியாவின் அனல் தெறித்த பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. கேப்டன் சனாக்கா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான் அந்த அணிக்கு அதிகபட்சமாக நுவனிடு பெர்னாண்டோ 19 ரன்கள் எடுத்தார். அனல் பறக்க பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அசால்ட்டான சாதனைகள்:
அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்து 2023 உலக கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. இந்தியாவின் இந்த உலக சாதனை வெற்றிக்கு சந்தேகமின்றி 166* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் மொத்தமாக 2 சதங்கள் உட்பட 283 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

1. அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவருமே தலா 20 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளனர். 2வது இடத்தில் சாகிப் அல் ஹசன் (16) உள்ளார்.

- Advertisement -

2. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 7*
2. எம்எஸ் தோனி/சச்சின் டெண்டுல்கர் : 6
3. முகமது அசாருதீன் : 5

3. மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 2992*, இலங்கைக்கு எதிராக
2. சச்சின் டெண்டுல்கர் : 2978 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. விவ் ரிச்சர்ட்ஸ் : 2950, இங்கிலாந்துக்கு எதிராக

- Advertisement -

4. அத்துடன் இப்போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவுட்டாகாமல் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 16 நாட்-அவுட் சதங்கள்
2. சச்சின் டெண்டுல்கர் : 15 நாட்-அவுட் சதங்கள்
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 12 நாட்-அவுட் சதங்கள்

5. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அணிகளுக்கு எதிராக 150+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 5 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அவர் 150+ ரன்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 4 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக 150+ ரன்கள் அடித்துள்ளனர்.

இதையும் படிங்க: IND vs SL : இலங்கையை துவம்சம் செய்த இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றுமொரு வெறித்தனமான உலக சாதனை

6. அது போக ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்கள் (21, இந்தியாவில்) மற்றும் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் (இலங்கைக்கு எதிராக, 10) அடித்த பேட்ஸ்மேன் ஆகிய இரட்டை உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by