இலங்கை வீரர் சங்கக்காராவின் பிரமாண்ட சாதனையை உடைத்த விராட் கோலி – விவரம் இதோ

Sanga-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எளிதாக எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இம்முறையாவது தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 245 ரன்கள் குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இதன் காரணமாக 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 131 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இலங்கை வீரரான குமார் சங்ககாராவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து உலக சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய விராட் கோலி 38 ரன்கள் எடுத்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸில் 76 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் இந்த போட்டியில் அடித்த இந்த 114 ரன்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் டீமுக்கு வேணாம்.. மீண்டும் அவரை விளையாட வையுங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

அந்த வகையில் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரே ஆண்டில் 2000 ரன்களை ஏழு முறை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனான குமார் சங்ககாரா ஆறு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை கடந்திருந்த வேளையில் தற்போது அவரது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement