பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் டீமுக்கு வேணாம்.. மீண்டும் அவரை விளையாட வையுங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

Prasidh
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில் இந்திய அணி முதல் போட்டியிலேயே அடைந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த தோல்விக்கு இந்திய அணியின் மோசமான பந்துவீச்சே காரணம் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சுட்டிக்காட்டி வருகின்றனர். அதேபோன்று இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகேஷ் குமாருக்கே வாய்ப்பளித்திருக்க வேண்டிய வேளையில் அறிமுக வீரராக பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

இப்படி அவருக்கு வாய்ப்பு வழங்கியது தவறு என்றும் அவருக்கு பதிலாக தொடர்ச்சியாக முகேஷ் குமாரே விளையாடி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஏனெனில் அறிமுக போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்கள் பந்துவீசி 93 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதேபோன்று மற்றொருபுறம் ஷர்துல் தாகூர் 19 ஓவர்கள் வீசி 101 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : கம்பீரமாக நின்ற இந்தியா.. ஒரு தோல்வியால் புள்ளிபட்டியலில் வங்கதேசத்தை விட பாதாளத்துக்கு சரிந்த பரிதாபம்

இருப்பினும் ஷர்துல் தாகூருக்கு ஓரளவு பேட்டிங்கில் கைகொடுக்கும் திறன் உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ரன்களை மட்டுமே வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணாவிடம் வேறு எந்த கூடுதலான திறனும் இல்லை என்பதனால் அடுத்த போட்டியில் நிச்சயம் முகேஷ் குமாரை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement