கம்பீரமாக நின்ற இந்தியா.. ஒரு தோல்வியால் புள்ளிபட்டியலில் வங்கதேசத்தை விட பாதாளத்துக்கு சரிந்த பரிதாபம்

WTC Table
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாபிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு மீண்டும் உடைந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா டீன் எல்கர் 185, மார்க்கோ யான்சன் 84* ரன்கள் எடுத்த உதவியுடன் 408 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது.

- Advertisement -

சரிந்த இந்தியா:
ஏனெனில் அதன் பின் 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவை 2வது இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த போட்டியில் பேட்டிங் துறையில் மற்றும் விராட் கோலியை தவிர்த்து ஏனைய பேட்ஸ்மேன்களும் பவுலிங் துறையில் பும்ரா, சிராஜ் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய பவுலர்களும் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை விட 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியா 66.66% புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது பதிவு செய்துள்ள இந்த தோல்வியால் மொத்தம் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிரா ஆகியவற்றை பதிவு செய்துள்ள இந்தியா 16 புள்ளிகளை 44.44 சதவீதத்தில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2025 புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. முதலிடத்தில் இதுவரை தோல்வியை பதிவு செய்யாத தென்னாப்பிரிக்கா 100% புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் 2, 3, 4 ஆகிய இடங்களில் முறையே பாகிஸ்தான் 61.11%, நியூசிலாந்து 50%, வங்கதேசம் 50% புள்ளிகளுடன் இருக்கிறது.

இதையும் படிங்க: இந்திய அணியின் செலக்சன் தப்பு.. தோல்விக்கான முக்கிய காரணத்தை சுட்டிக்காட்டிய சச்சின் டெண்டுல்கர்

அதனால் இந்த சரிவிலிருந்து மீண்டு வந்து குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்தியா பெரிய வெற்றிகளை குவிப்பது அவசியமாகிறது.

Advertisement