இந்திய அணியின் செலக்சன் தப்பு.. தோல்விக்கான முக்கிய காரணத்தை சுட்டிக்காட்டிய சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar 2
- Advertisement -

தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாக போயுள்ளது. சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா தங்களுடைய முதல் இன்னிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 408 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டீன் எல்கர் 185, மார்கோ யான்சென் 84* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகள் செய்தார்.

- Advertisement -

இந்திய அணியின் செலக்சன்:
அதை தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய இந்தியா முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 131 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த வகையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இந்தியா போராடாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய இந்திய வீரர்களின் பேட்டிங் சுமாராக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“சிறப்பாக விளையாடினீர்கள் தென்னாப்பிரிக்கா. ஆரம்பத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள் என்று நான் கருதினேன். இருப்பினும் அவர்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணி எதிர்பார்ப்புகளை விட சிறப்பான நுணுக்கங்களை 2வது இன்னிங்ஸில் வெளிப்படுத்தியது. அதே சமயம் போட்டி நடைபெற நடைபெற பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக மாறியது”

இதையும் படிங்க: விராட் கோலி காப்பாற்றி வந்த கிறிஸ்மஸ் கௌரவத்தை.. காற்றில் பறக்க விட்ட ரோஹித் சர்மா

“ஆனால் இப்போட்டியை நான் பார்த்த வரையில் இந்திய அணியின் ஷாட் செலக்சன் விரும்பத்தக்கதாக இல்லை. இந்த டெஸ்ட் முழுவதிலும் டீன் எல்கர், யான்சென், பேடிங்கம், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகிய சிலர் மட்டுமே பேட்டிங்கில் சூழ்நிலைகளை நோக்கி தங்களுடைய டெக்னிக்கை பயன்படுத்தி எளிதாக செயல்பட்டனர்” என்று கூறினார்.

Advertisement