விராட் கோலி காப்பாற்றி வந்த கிறிஸ்மஸ் கௌரவத்தை.. காற்றில் பறக்க விட்ட ரோஹித் சர்மா

Rohit Sharma Test
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா டீன் எல்கர் 185, மார்கோ யான்சென் 84* ரன்கள் எடுத்த உதவியால் 408 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

முடிந்த வெற்றி நடை:
அதைத்தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்களை எடுத்தார். இந்த தோல்வியால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் உடைந்தது.

முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் துவங்கிய இந்த போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். இந்த பாக்ஸிங் டே போட்டிகளில் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு டர்பன் நகரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பின் 2014ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே போட்டியை தோனி தலைமையில் இந்தியா ட்ரா செய்தது.

- Advertisement -

ஆனால் 2018இல் விராட் கோலி தலைமையில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதை தொடர்ந்து 2020இல் மீண்டும் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியில் ரகானே தலைமையில் 36க்கு ஆல் அவுட்டான பின் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததை மறக்கவே முடியாது. அதன் பின் 2021இல் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: லெஜெண்ட் சங்ககாராவின் மாபெரும் சாதனையை உடைத்த கிங் கோலி.. யாராலும் தொட முடியாத புதிய உலக சாதனை

அந்த வகையில் 1985 – 2013 வரை 1 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்ற இந்தியா 2014க்குப்பின் விராட் கோலி மற்றும் ரகானே தலைமையில் 3 போட்டிகளை தொடர்ச்சியாக வென்று கௌரவ வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் தற்போது தன்னுடைய கேரியரில் முதல் முறையாக பாக்சிங் டே போட்டியில் இந்தியாவை வழி நடத்திய ரோகித் சர்மா சுமாராக கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கிலும் மோசமாக விளையாடி அந்த கௌரவத்தை காற்றில் பறக்க விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement