நாங்க இப்படி அசிங்கப்பட்டு தோத்து நிக்க இதுதான் காரணம். தோல்வி குறித்து – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று டிசம்பர் 28-ஆம் தேதி மூன்றாம் நாளில் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 245 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 101 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 408 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டீன் எல்கர் 185 ரன்களையும், மார்கோ யான்சன் 84 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதனை தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் இன்னிங்க்ஸை நீங்கள் விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி மட்டும் 76 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த இன்னிங்ஸ் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற தகுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் நாங்கள் இந்த சூழலை சரியாக கணித்து செயல்படவில்லை. முதல் இன்னிங்சில் ராகுல் மட்டும் தான் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இது போன்ற கடினமான இடங்களில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைவருமே சிறப்பாக ஒன்றிணைந்து விளையாட வேண்டியது அவசியம். ஆனால் இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை.

இதையும் படிங்க : இந்தியாவை தோற்கடிகச்ச என்னோட பிளான் இது தான்.. கம்பேக் கொடுக்க விடமாட்டோம்.. எல்கர் பேட்டி

அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் அதிக பவுண்டரிகள் கிடைக்கும் ஆனால் நாங்கள் இங்கே பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதே வேளையில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அற்புதமாக இந்த மைதானத்தை பயன்படுத்தி ரன்களை குவித்தனர். இப்படி பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறுதான் இந்த தோல்விக்கு காரணம் அதனாலேயே நாங்கள் இங்கு நிற்கிறோம் என ரோஹித் சர்மா வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement