IND vs AUS : போட்டி ஆரம்பிச்ச 14 பந்திலேயே உலகசாதனை படைத்த விராட் கோலி – விவரம் இதோ

Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது இன்று சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான மிட்சல் மார்ஷ்ஷின் கேட்சைப் பிடித்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை உலக கோப்பை போட்டிகளில் விக்கெட் கீப்பராக இல்லாமல் சாதாரண வீரராக அதிக கேட்ச்களை பிடித்த வீரராக அனில் கும்ப்ளே 14 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கபில்தேவ் மற்றும் சச்சின் ஆகியோர் 12 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க : வீடியோ : 110/2 டூ 140/7.. வியந்த விராட் கோலி.. மேஜிக் பந்தால் ஸ்மித் க்ளீன் போல்டாக்கி ஆஸியை தெறிக்க விட்ட ஜடேஜா

இந்நிலையில் இந்த போட்டியில் மிட்சல் மார்ஷின் கேட்சை விராட் கோலி பிடித்ததன் மூலம் 15 கேட்ச்களை பிடித்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அதோடு மட்டுமின்றி இந்த போட்டியில் மேலும் ஒரு விக்கெட்டாக ஆடம் ஜாம்பாவின் கேட்சையும் அவரே பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement