வீடியோ : 110/2 டூ 140/7.. வியந்த விராட் கோலி.. மேஜிக் பந்தால் ஸ்மித் க்ளீன் போல்டாக்கி ஆஸியை தெறிக்க விட்ட ஜடேஜா

Ravindra Jadeja
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இசான் கிசான் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கி ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் விராட் கோலியின் சிறப்பான கேட்ச்சால் மிட்சேல் மார்க்ஸ் டக் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்துடன் சேர்ந்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 41 ரன்களில் இருந்த போது குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

மிரட்டிய ஜடேஜா:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுத்த ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்து அரை சதத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது 110/2 என ஆஸ்திரேலியா நல்ல நிலையில் இருந்த போது நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் 28வது ஓவரின் முதல் பந்தில் ரவீந்திர ஜடேஜாவின் மாயாஜால சுழலை கணிக்க முடியாமல் கிளீன் போல்டானார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

குறிப்பாக முழுமையாக ஸ்டம்ப்கள் தெரியாத அளவுக்கு நின்ற ஸ்மித்தின் தடுப்பை உடைத்த ஜடேஜா ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்க்கும் அளவுக்கு மாயாஜால பந்தை வீசி ஜடேஜா போல்டாக்கியதை பார்த்து விராட் கோலி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் நிற்காத ஜடேஜா மறுபுறம் சவாலை கொடுத்த லபுஸ்சேனையும் 27 (41) ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த அலெக்ஸ் கேரியை எல்பிடபிள்யூ முறையில் காலி செய்தார்.

- Advertisement -

அந்த வகையில் அடுத்தடுத்த ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த ஜடேஜா பெரிய திருப்புமுனையை உண்டாக்கியதை பயன்படுத்திய குல்தீப் யாதவ் மறுபுறம் அதிரடி காட்டுவதற்காக செட்டிலான கிளன் மேக்ஸ்வெலை 15 (25) ரன்களில் கிளீன் போல்டாக்கினார். அதே போல ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களில் அவுட்டாக்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

அதனால் 110/2 நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா மிடில் ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 140/7 என்ற சரிவை சந்தித்தது. குறிப்பாக போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகின்றனர். அதிலும் ஜடேஜா 10 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து தெறிக்க விட்டார். அதனால் 44 ஓவரில் ஆஸ்திரேலியா 168/8 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

Advertisement