DC vs RCB : ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொடாத புதிய சாதனை படைத்த கிங் கோலி – ஆர்சிபி ஸ்கோர் இதோ

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவா ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் இணைந்த கேப்டன் டு பிளேஸிஸ் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

குறிப்பாக 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 (32) ரன்களில் மிட்சேல் மார்ஷ் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். குறிப்பாக அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய மகிபால் லோம்ரர் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 5 பவுண்டரியுடன் 55 (46) ரன்களில் முக்கிய நேரத்தில் சற்று மெதுவாக விளையாடிய நிலையிலேயே ஆட்டமிழந்தார்.

- Advertisement -

புதிய சாதனை:
ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் இந்த 55 ரன்களையும் சேர்த்து 7000 ரன்களை கடந்த முதல் வீரராக யாரும் தொடாத மற்றுமொரு உச்சத்தை தொட்டு புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். கடந்த 2008இல் பெங்களூரு அணிக்காக களமிறங்கி 15 வருடங்களை கடந்து ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக சாதனை படைத்துள்ள அவர் 7000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு மற்றுமொரு உச்சத்தை எட்டியுள்ளார்.

குறிப்பாக கடந்த வருடம் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது முழுமையான ஃபார்முக்கு திரும்பி இந்த வருடம் ஆரம்பம் முதலே சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பெங்களூரு அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 7043*
2. ஷிகர் தவான் : 6536*
3. டேவிட் வார்னர் : 6189*
4. ரோகித் சர்மா : 6063*
5. சுரேஷ் ரெய்னா : 5528

- Advertisement -

அவரை தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் மீண்டும் 1 சிக்ஸருடன் 11 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் மறுபுறம் தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த மஹிப்பால் லோம்ரர் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் அரை சதமடித்து 54* (29) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். அவருடன் அனுஜ் ராவத் 8* (3) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 181/4 ரன்கள் எடுத்தது. சற்று சுமாராகவே பந்து வீசிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகளும் கலீல் அகமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையும் படிங்க:CSK vs MI : ரோஹித்தின் மும்பையை தசாப்தம் தாண்டி அடக்கிய சிஎஸ்கே – 12 வருட சோகத்தை உடைத்து மாஸ் வெற்றி பெற்றது எப்படி

அதை தொடர்ந்து 182 ரன்களை புள்ளி பட்டியலில் 10வது இடத்தை காலி செய்து மேல் நோக்கி நகர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற டெல்லி போராடி வருகிறது. அதே போல 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு இந்த போட்டியில் வெற்றி பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்கு போராடி வருகிறது.

Advertisement