CSK vs MI : ரோஹித்தின் மும்பையை தசாப்தம் தாண்டி அடக்கிய சிஎஸ்கே – 12 வருட சோகத்தை உடைத்து மாஸ் வெற்றி பெற்றது எப்படி

CSK vs MI Sivam Dube
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 49வது போட்டியில் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு புதிய தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 1 பவுண்டரியுடன் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் 6 (4) ரன்களில் கிளீன் போல்டாக மறுபுறம் தடுமாறிய இசான் கிசான் தீபக் சஹார் வேகத்தில் 7 (9) ரன்களில் நடையை கட்டினார்.

அப்போது ரோகித் சர்மா புதிய திட்டத்துடன் 3வது இடத்தில் களமிறங்கிய நிலையில் ஸ்டம்ப்புகளுக்கு அருகே வந்த தோனி வேகத்தை குறைத்து தீபக் சஹரை சற்று மெதுவாக வீசுமாறு கேட்டுக் கொண்டார். அந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடிக்க முயற்சித்த ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரராக பரிதாப சாதனையுடன் திரும்பினார். அதனால் 14/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பையை 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரியுடன் 26 (22) ரன்களில் ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

தாசப்த வெற்றி:
அவருடன் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் நேஹால் வதேரா 8 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 64 (51) ரன்களில் போராடி அவுட்டானார். இறுதியில் டிம் டேவிட் 2 (4) என அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் மும்பை போராடி 139/8 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரனா 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 140 ரன்களை துரத்திய சென்னைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (16) ரன்கள் எடுத்திருந்த போது பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார்.

மறுபுறம் டேவோன் கான்வே நிதானத்தை காட்டிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ரகானே 1 பவுண்டரி 1 சிக்சருடன் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட முயற்சித்த போது மீண்டும் பியூஸ் சாவ்லா 12 (11) ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் இம்பேக்ட் வீரராக வந்த ராயுடு மீண்டும் தடுமாற்றமாகவே செயல்பட்டு சிக்ஸர் அடித்த அடுத்த பந்தில் 12 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அப்போது வந்த சிவம் துபே 2 சிக்ஸர்களை பறக்க விட்ட நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய டேவோன் கான்வே 4 பவுண்டரியுடன் 44 (42) ரன்களில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிவம் துபே 26* (18) ரன்களும் தோனி 2* (3) ரன்களும் எடுத்ததால் 17.4 ஓவரிலேயே 140/4 ரன்கள் எடுத்த சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வென்ற இந்த சீசனில் 2வது முறையாக மும்பையை தோற்கடித்தது.

அந்த அணிக்கு ரோகித் சர்மா போன்ற டாப் மற்றும் டிம் டேவிட் போன்ற லோயடர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆரம்பத்திலேயே பெரிய ரன்களை எடுக்க தவறியது வெற்றி பாதி பறிபோக வைத்தது. அதே போல் பந்து வீச்சில் சாவ்லா தவிர்த்து யாருமே தாக்கத்தை ஏற்படுத்த அதை பயன்படுத்திய சென்னை 11 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

அதை விட 2008இல் சச்சின் தலைமையிலான மும்பையை சேப்பாக்கத்தில் தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை 2010இல் கடைசியாக வென்றிருந்தது. ஆனால் அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் 2012, 2013, 2015 ஆகிய அடுத்தடுத்த 3 வருடங்களில் சென்னையை அதன் சொந்த ஊரில் தொடர்ந்து தோற்கடித்த மும்பை 2019இல் சந்தித்த 2 போட்டிகளிலும் வென்று சேப்பாக்கத்தை தன்னுடைய கோட்டையாக்கியது.

இதையும் படிங்க: வீடியோ : சென்னைக்கு கிடைத்த மலிங்கா – அதே மிரட்டல் யார்கர் டெத் ஓவரில் அதே துல்லியம், மும்பையின் ஸ்கோர் இதோ

அந்த வகையில் சுமார் 10 வருடங்களாக சென்னையை அதன் சொந்த ஓவரில் மும்பை ஓடவிட்டு தோற்கடித்தது அந்த அணி ரசிகர்களின் மனதில் குமுறலாகவே இருந்து வந்தது. அந்த சோகத்தை தசாப்தம் கழித்து உடைத்துள்ள சென்னை ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை 12 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் தோற்கடித்து மாஸ் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement