வீடியோ : சென்னைக்கு கிடைத்த மலிங்கா – அதே மிரட்டல் யார்கர் டெத் ஓவரில் அதே துல்லியம், மும்பையின் ஸ்கோர் இதோ

Pathirana Yorker
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் கடந்த 2 போட்டிகளில் 200+ ரன்களை சேசிங் செய்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற மும்பைக்கு எதிராக கடந்த 3 போட்டிகளாக வெற்றியை காண முடியாத சென்னை வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாட முடிவெடுத்தார். அந்த நிலைமையில் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 1 பவுண்டரியுடன் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் 6 (4) ரன்களில் போல்ட்டாக மறுபுறம் தடுமாறிய இசான் கிசான் 7 (9) ரன்களில் தீபக் சஹர் வேகத்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அதே ஓவரின் 5வது பந்தில் ஸ்டம்ப்புகளுக்கு அருகே வந்த தோனி 5வது பந்தை தீபக் சஹாரை மெதுவாக வீசுமாறு சொன்ன நிலையில் அதை கணிக்க தவறிய ரோகித் சர்மா விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடிக்க முயற்சித்து 3வது இடத்தில் களமிறங்கியும் டக் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 14/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய மும்பைக்கு அடுத்து ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் – நேஹால் வதேரா ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினர். அதில் சற்று அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போதிலும் 3 பவுண்டரியுடன் ரவீந்திர ஜடேஜா சுழலில் 26 (22) ரன்களில் கிளீன் போல்ட்டானார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் மெதுவாக விளையாடிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடிய இளம் வீரர் நேஹல் வதேரா 8 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 64 (51) ரன்கள் குவித்த போது பதிரான யார்க்கர் பந்தில் க்ளீன் போல்டானார். அதை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 2 (4) ரன்களில் அவுட்டான நிலையில் கடைசி ஓவரில் அர்சத் கானை 1 (2) ரன்களில் தன்னுடைய ஸ்லிங்கா பந்தால் காலி செய்த மதிஷா பதிரனா மறுபுறம் போராடிய ட்ரிஷன் ஸ்டப்ஸை 4வது பந்தில் 20 (21) ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை போராடி 139/8 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரான 4 ஓவரில் 1 பவுண்டரி கூட கொடுக்காமல் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3.75 என்ற இதர பவுலர்களைக் காட்டிலும் குறைவான எக்கனாமியில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக 13வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 15வது ஓவரில் 7 ரன்களும் 18வது ஓவரில் வெறும் 2 ரன்களும் 20வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து டெத் ஓவர்களில் அசத்தினார்.

இதனால் சென்னை அணிக்கு மலிங்காவை போன்ற பவுலர் கிடைத்து விட்டதாக அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அவருடன் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மா, இசான் கிசான் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சென்னையின் தரமான ஸ்விங் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் குறைவான ரன்களில் அவுட்டானது மும்பை பெரிய ஸ்கோரை எடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டது.

இதையும் படிங்க: வீடியோ : சென்னைக்கு கிடைத்த மலிங்கா – அதே மிரட்டல் யார்கர் டெத் ஓவரில் அதே துல்லியம், மும்பையின் ஸ்கோர் இதோ

இருப்பினும் கூட துல்லியமாக பந்து வீசினால் வெற்றி பெறும் அளவுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினர். அதனால் குறைவாகவே இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையில் சென்னை பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement