113* ரன்ஸ்.. ராஜஸ்தானின் ஸ்பெஷல் போட்டியில் ராஜாவாக மின்னிய கிங் கோலி.. முதல் வீரராக மாபெரும் ஐபிஎல் சாதனை

Virat Kohli 223
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 19வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அப்போட்டியில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றதற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ராஜஸ்தான் அணி ஸ்பெஷலான பிங்க் ஜெர்ஸியில் விளையாடியது.

அத்துடன் இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் தங்கள் மாநிலத்தின் கிராமங்களில் மின்சாரம் வசதி இல்லாத 6 ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் மின்சார வசதியை செய்து கொடுப்போம் என்று ராஜஸ்தான் அணி அறிவித்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் டாஸ் வீசும் போது ஒரு ராஜஸ்தான் ஏழை பெண்மணி சூரியசக்தியிலான விளக்கை சஞ்சு சாம்சனிடம் கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய கிங்:
அதை சஞ்சு சாம்சன் பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ்க்கு பரிசாக கொடுத்தார். அந்த வகையில் மிகவும் ஸ்பெஷலாக துவங்கிய இந்த போட்டியில் பேட்டிங்கை துவக்கிய பெங்களூருக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் ஆரம்பம் முதலில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கடந்த போட்டிகளில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை விட்டதால் பெங்களூருவுக்கு தோல்வி கிடைத்தது.

எனவே இம்முறை அந்த தவறை செய்யாத இந்த ஜோடியில் சற்று அதிரடியாக விளையாடிய விராட் கோலி முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார். அவருடன் 14 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டு பிளேஸிஸ் 44 (33) ரன்களில் சஹால் சுழலில் சிக்கினார். அப்போது வந்த கிளன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் நன்ரே பர்கர் வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த சௌரவ் சௌஹான் 9 ரன்களில் சஹால் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய 8வது சதத்தை அடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* (72) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 183/3 ரன்கள் எடுத்து அசத்தியது.

இதையும் படிங்க: அப்படிப்பட்ட உதவாத வீரர்களுக்காக பயப்படாமா அதை செய்ங்க.. அஜித் அகர்கருக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

அத்துடன் இந்த 113 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் 7500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படத்துள்ளார். மேலும் இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார். ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சகால் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement