முழு பார்முக்கு திரும்பினாரா சேஸ் மாஸ்டர் கிங் கோலி ! குஜராத்தை பந்தாடி 2 புதிய சாதனை

Virat Kohli Du Plessis RCB vs GT 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த வருடம் ஆரம்பம் முதலேயே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 முறை கோல்டன் டக் அவுட்டாகி மோசமான பார்மில் திணறி வருவது பல முன்னாள் வீரர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அவர் கடந்த 2019க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Virat Kohli 20

- Advertisement -

அந்த நிலைமையில் குஜராத்துக்கு எதிராக நேற்று தனது கடைசி லீக் போட்டியில் வாழ்வா – சாவா என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூருவுக்கு ஃபார்முக்கு திரும்பிவிட்டேன் என்பதுபோல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 8 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 62* (47) ரன்களும் டேவிட் மில்லர் 34 (25) ரன்களும் எடுத்தனர்.

மும்பையின் கையில் பெங்களூரு:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பாரமின்றி தவிக்கும் விராட் கோலியுடன் களமிறங்கிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் அவருக்கு ஆதரவாக நிதானமாக பேட்டிங் செய்தார். இந்த சீசனில் பெரும்பாலும் தடுமாறிக் கொண்டிருந்த விராட் கோலி இந்த போட்டியில் பழைய பன்னீர் செல்வமாக முதல் ஓவரிலிருந்தே தெளிவாகவும் அதிரடியாகவும் தடுமாறாமல் ரன்களை குவித்தார். 15 ஓவர்கள் வரை அசத்திய இந்த ஜோடி 115 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதில் டு பிளேஸிஸ் 44 (38) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (54) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தபின் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

Virat Kohli Du Plessis RCB vs GT

இறுதியில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 40* (18) ரன்கள் எடுத்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 18.4 ஓவர்களில் 170/2 ரன்கள் எடுத்து பெங்களூரு வெற்றி பெற்றது. அதனால் 14 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் டெல்லியை முந்தி 4-வது இடத்திற்கு முன்னேறியது. ஆனாலும் மே 21இல் நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வென்றால் மட்டுமே பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

முழு பார்முக்கு திரும்பினாரா:
இந்தியாவின் ரன் மெஷினாக கருதப்படும் விராட் கோலி கடந்த பல வருடங்களாக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாக முன் ஓடி ஓடி ரன் மழை பொழிந்ததால் அவரின் உடம்பிலும் ஆட்டத்திலும் சோர்வு தென்படுகிறது என்பதால் 2 – 3 தற்காலிக ஓய்வு எடுத்துவிட்டு பார்முக்கு புத்துணர்ச்சியுடன் திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

Virat Kohli vs GT

ஆனால் விமர்சனங்களுக்கு பின் வாங்காமல் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது பார்முக்கு திரும்பி விட்டார் என்றே கூறத் தோன்றுகிறது. இருப்பினும் 3 வருடங்களாக முழு ஃபார்மை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலியை நேற்று ஒரு போட்டியில் வைத்து பார்முக்கு திரும்பி விட்டார் என்றும் கூற முடியாது.

- Advertisement -

1. ஏனெனில் இந்த வருடம் இதுவரை 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ள அவர் அந்த இரண்டுமே குஜராத்துக்கு எதிராக அடித்துள்ளார்.

3. அந்த வகையில் குஜராத்துக்கு எதிராக 2 இன்னிங்சில் 131 ரன்களை 65.50 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் இதர அணிகளுக்கு எதிராக 12 இன்னிங்சில் 178 ரன்களை 16.18 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். எனவே அவர் முழு பார்முக்கு திரும்பி விட்டார் என்பதை அறிய மேலும் சில போட்டிகளில் காத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

- Advertisement -

சேஸ் மாஸ்டர்:
1. எது எப்படி இருந்தாலும் அவர் அடித்தாலே அதில் ஒரு சாதனை இருக்கும் என்பதைப் போல் நேற்றைய 169 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ய உதவிய அவர் ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும்போது 3000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 3000*
2. டேவிட் வார்னர் : 2839
3. ராபின் உத்தப்பா : 2832

2. மேலும் 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தையும் படைத்தார்.

இதையும் படிங்க : இந்த ரூல்ஸை மொதல்ல கிரிக்கெட்டில் இருந்து நீக்குங்க. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டால் – ரசிகர்கள் கொந்தளிப்பு

அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 7000*, பெங்களூருவுக்காக
2. சுரேஷ் ரெய்னா : 5529, சென்னைக்காக
3. ரோஹித் சர்மா : 4980, மும்பைக்காக

Advertisement