இந்த ரூல்ஸை மொதல்ல கிரிக்கெட்டில் இருந்து நீக்குங்க. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டால் – ரசிகர்கள் கொந்தளிப்பு

Maxwell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் நேற்று பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பினை தக்க வைக்க முடியும் என்ற கட்டாய சூழலில் விளையாடிய பெங்களூரு அணியானது குஜராத் அணி நிர்ணயித்த 169 ரன்களை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற 2 முக்கிய முடிவுகள் காரணமாக அமைந்தன. குறிப்பாக குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும் போது குஜராத் அணியின் மூன்றாம் வீரராக களமிறங்கிய மேத்யூ வேட்டிற்கு மூன்றாம் நடுவர் அவுட் என்ற தவறான முடிவினை அறிவித்தார்.

- Advertisement -

ஆனால் உண்மையில் அவரது அந்த விக்கெட் விக்கெட்டே கிடையாது. அதற்கு காரணம் யாதெனில் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து அவரது பேட்டில் பட்டது போல் காண்பிக்கவில்லை. இதன் காரணமாக அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் அந்த முடிவினை ஏற்றுக்கொள்ளாத மேத்யூ வேட் ஓய்வு அறைக்கு சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் அதிகளவு வைரலாகின.

அதன் பின்னர் இரண்டாவது முறையாக போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 14.4-வது ஓவரில் ரஷீத் கான் பந்துவீச்சில் டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து அடுத்த பந்தை அதிரடி வீரர் மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். ரஷீத் கான் வீசிய அந்த பந்து மேக்ஸ்வெல்லை கடந்து ஸ்டம்பில் பட்டது. ஆனாலும் பெய்ல்ஸ் கீழே விழாமல் எல்இடி விளக்குகள் மட்டுமே எரிந்தன. மேலும் ஸ்டம்பில் அடித்த அந்த பந்து பவுண்டரி நோக்கிச் சென்றதால் நடுவர் பவுண்டரியையும் எக்ஸ்ட்ராவாக வழங்கினார். ஆனால் ரீப்ளேவின் போது பந்து ஸ்டம்பில் பட்டதும் லைட் எரிந்ததும் தெளிவாக தெரிந்தது. இருந்தாலும் வெயின்ஸ் கீழே விழாததால் அந்த விதி முறைப்படி அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை.

maxwell 1

இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் டூபிளெஸ்ஸிஸ் அவுட்டான அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி இருந்தால் போட்டி இன்னும் சுவாரசியமாக சென்றிருக்கும். இப்படி ஸ்டம்பில் பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாது தற்போது பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் போட்டியின் முக்கியமான அந்த கட்டத்தில் அந்த விக்கெட் விழுந்திருந்தால் எந்த முடிவு வேண்டுமென்றாலும் நடந்து இருக்கும். இதனால் இந்த விதிமுறையை தற்போது கிரிக்கெட்டில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாகவே லைட் எறியும் எல்இடி பெயில்ஸ்கள் தற்போது கிரிக்கெட்டில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பந்து ஸ்டம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழாததற்கு சில காரணங்களும் இருக்கின்றன. அதாவது நவீன முறையில் தயாரிக்கப்படும் இந்த லைட் பெயில்ஸ்கள் கூடுதல் எடையுடன் இருப்பதால் பந்து பட்டாலும் கீழே விழுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதேபோன்று பலமுறை நடந்திருந்தாலும் இனி இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்றும் பந்து ஸ்டம்பில் பட்டு லைட் எறிந்தால் அவுட் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : கடைசில அவர் வாயாலே சொல்ல வச்சிட்டாங்க. ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு – கோலி எடுத்துள்ள முடிவு

பெரும்பாலும் பெயில்ஸ் கீழே விழும் தன்மையுடன் இருந்தாலும் இந்த லைட் பெயில்ஸ்கள் சில முறை கீழே விழுவதில்லை இது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்த விதிமுறையை உடனே மாற்றி பந்து ஸ்டம்பில் பட்டு லைட் எறிந்தால் அவுட் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement