கடைசில அவர் வாயாலே சொல்ல வச்சிட்டாங்க. ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு – கோலி எடுத்துள்ள முடிவு

Virat Kohli Rohit Sharma
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ச்சியாக கேப்டன்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்திய அணி மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் என அனைத்து வடிவத்தில் இருந்தும் தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பேட்டிங் பார்ம் குறித்து பெரிய அளவில் விமர்சனம் நிலவி வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெங்களூர் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Virat Kohli Du Plessis RCB vs GT

- Advertisement -

ஆனால் இந்த ஐபிஎல் தொடரிலும் அவரது பேட்டிங் சீரற்ற முறையில் தான் உள்ளது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 20 ரன்களுக்கும் குறைவான சராசரியோடு விளையாடி வருகிறார். அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிகுந்த மோசமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆகி உள்ள விராட் கோலி நடைபெற்று முடிந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தனது மோசமான பேட்டிங் பார்ம் குறித்து பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் : ஸ்கோர்கள் வரத் துவங்கும் போது நான் எவ்வளவு உத்வேகத்துடன் இருப்பேன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் ஒரு சமநிலையை பெற வேண்டுமெனில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அப்படி ஓய்வு எடுத்தால் தான் என்னால் புத்துணர்ச்சி பெற முடியும்.

Virat Kohli 20

ஒரு முறை நான் நல்ல மனநிலைக்கு வந்த பிறகு இன்னும் என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய முக்கிய நோக்கம் இந்தியாவை ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் வெற்றி பெற வைப்பது மட்டும் தான். அதற்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்னுடன் 6-7 ஆண்டுகள் நெருக்கமாக இருந்துள்ளார்.

- Advertisement -

அவர் என்னை கவனித்த வகையில் எனக்கு ஓய்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நிச்சயம் நான் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது எப்பொழுதும் உடல் தகுதியில் சரியாக இருக்க வேண்டும். அதேபோன்று மனரீதியாகவும் உங்களது போகஸ் சரியாக இருக்க வேண்டும். எனவே ஐபிஎல் தொடர் முடிந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் என்று கோலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எல்லோரும் ப்ராட்மேனுடன் கம்பேர் பன்றாங்க, ஆனால் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது – வங்கதேச நட்சத்திர வீரர் பேச்சு

ஏற்கனவே கோலி மோசமான பேட்டிங் ஃபார்மில் தவித்த போது பலரும் அவரை ஓய்வு எடுக்க சொல்லி வந்த நிலையில் தற்போது அவர் வாயாலேயே அந்த முடிவை சொல்லி விட்டார். இதன் காரணமாக ஐபிஎல் தொடர் முடிந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் சிறிது நாட்கள் தள்ளி இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement