எல்லோரும் ப்ராட்மேனுடன் கம்பேர் பன்றாங்க, ஆனால் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது – வங்கதேச நட்சத்திர வீரர் பேச்சு

Rahim-2
Advertisement

வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி மே 15-ஆம் தேதியன்று சிட்டகாங் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு குசன் மெண்டிஸ் 54 ரன்கள், தினேஷ் சந்திமால் 66 ரன்கள் எடுத்தனர். அத்துடன் இலங்கை நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் அஞ்சேலோ மேத்யூஸ் அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்து 199 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஸ்டவசமாக இரட்டை சதம் அடிக்க முடியாமல் அவுட்டாகி ஏமாற்றமடைந்தார்.

Angelo Mathews 199.jpeg

வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய நஜ்முல் ஹூசைன் 6 விக்கெட்டுகளும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசத்திற்கு மஹ்முதுல் ஜாய் – தமீம் இஃபால் ஓபனிங் ஜோடி ஆரம்பம் முதலே அபார பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் ஜாய் 58 ரன்களில் ஆட்டமிழக்க தமிம் இக்பால் சதமடித்து 133 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ட்ராவில் முதல் டெஸ்ட்:
அதன்பின் மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்திய வங்கதேச நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக சதமடித்து 105 ரன்கள் எடுத்தார். அவருடன் லிட்டன் தாஸ் 88 ரன்கள் எடுக்க வங்கதேசம் தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கொசன் ரஞ்சிதா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 68 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கைக்கு கேப்டன் திமுத் கருணரத்னே பொறுப்புடன் அரைசதம் கடந்து 52 ரன்களிலும் குசல் மெண்டிஸ் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஏற்கனவே 199 ரன்களில் அவுட்டான அஞ்சலோ மெத்யூஸ் டக் அவுட்டானார்.

Rahim 1

அதை தொடர்ந்து தினேஷ் சண்டிமால் 39* ரன்களும் நிரோஷன் டிக்வெல்லா 61* ரன்கள் எடுத்திருந்தபோது 5-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் 1 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட அஞ்சலோ மேத்யூஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி வரும் மே 23-ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

முஷ்பிகர் 5000:
முன்னதாக இந்த போட்டியில் 105 ரன்கள் எடுத்த வங்கதேச நட்சத்திர அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை கடந்த முதல் வங்கதேச பேட்ஸ்மேன் என்ற புதிய சரித்திர சாதனை படைத்தார். கடந்த 2005இல் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக 3 வகையான வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார். அதனால் வங்கதேச ரசிகர்கள் அவரை ஒரு சூப்பர் ஸ்டாரை போல கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் இது போல ரன்கள் அடிக்கும் போதெல்லாம் வங்கதேச ரசிகர்கள் தம்மை ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேனுடன் ஒப்பிட்டு பேசுவதாகவும் ஆனால் ரன்கள் அடிக்க தவறினால் மட்டம் தட்டி பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Rahim

இது பற்றி இந்த போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சதம் அடிக்கும் போது நிறைய பேர் என்னை டான் ப்ராட்மேனுடன் ஒப்பிட்டு பேசுவதை வங்கதேசத்தில் மட்டுமே பார்க்கிறேன். ஆனால் நான் சதங்கள் அடிக்காத போது எனக்கு நானே குழி பறித்துக் கொள்வதை போல் உணருகிறேன். இருப்பினும் ஒரு மூத்த வீரர்களில் நானும் ஒருவர் என்பதால் நாங்கள் நீண்ட நாட்கள் அணியுடன் இருக்க முடியாது. ஆனால் அதுவே கலாச்சாரம் என்பதால் இளம் வீரர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. எனவே களத்திற்கு வெளியே நிலவும் அதுபோன்ற சலசலப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் நான் காது கொடுத்தால் களத்தில் எங்கள் நாட்டுக்காக ஆற்ற வேண்டிய கடமை பாதிக்கப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : சிறப்பாக பந்து வீசுகிறார் – இந்திய வீரருக்கு தாமாக முன் வந்து பாரட்டி அட்வைஸ் கொடுத்த ஜாம்பவான் பிரெட் லீ

அதாவது சதங்கள் அடித்தாலும் இல்லை என்றாலும் புகழ்ச்சிக்கு மயங்காத தாம் எந்த கருத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருந்து எப்போதும் போல் நாட்டுக்காக கடமையாற்றுவதாக தெரிவித்தார். அதுபோன்ற விமர்சனங்களுக்கு காது கொடுத்தால் களத்தில் தமது செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 5000 ரன்களை எடுத்த முதல் வங்கதேசராக சாதனை படைத்தது பெருமை அளிப்பதாக தெரிவித்த அவர் வரும் காலங்களில் நிறைய இளம் வீரர்கள் 8000, 10000 ரன்களைக் கூட அடிப்பார்கள் என்று கூறினார்.

Advertisement