சிறப்பாக பந்து வீசுகிறார் – இந்திய வீரருக்கு தாமாக முன் வந்து பாரட்டி அட்வைஸ் கொடுத்த ஜாம்பவான் பிரெட் லீ

Lee
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக முழுமையாக விளையாடி வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். கடந்த 2021இல் முதல் முறையாக அறிமுகமாகி வாய்ப்பு கிடைத்த ஒருசில போட்டிகளிலேயே 145 கி.மீ வேக பந்துகளை வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி உட்பட நிறைய பேரின் பாராட்டுகளை வாங்கினார். அதனால் அவரை 4 கோடி என்ற பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணி நிர்வாகம் யோசனையின்றி தக்க வைத்து இந்த வருடம் முழுமையான வாய்ப்பு கொடுத்தது. அதை சரியாக பயன்படுத்தி அவர் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 21 விக்கெட்களை எடுத்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

வருங்கால உம்ரான் மாலிக்:
இந்த வருடம் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வரும் அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்துவீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை உட்பட விரைவில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் கொடுக்கும் அவருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற பேச்சும் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் 150 கி.மீ வேகப்பந்துகளை தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலர்கள் யாரும் இல்லாததால் இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பெரும்பாலும் நிலவி வருகிறது.

பிரெட் லீ அட்வைஸ்:
அந்த வகையில் 161.3 கி.மீ வேகப்பந்தை வீசி உலக சாதனை படைத்துள்ள சோயப் அக்தர் தமது சாதனையை நீண்ட நாட்கள் காயமின்றி விளையாடி உம்ரான் உடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று சமீபத்தில் கூறினார். அந்த வரிசையில் அவரை பாராட்டியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ காயமின்றி விளையாடுவதற்கான ஒருசில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் வேகமானது. 150 கி.மீ வேகத்திற்கு மேல் வீசுவதற்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும். அது நிச்சயமாக வலியை கொடுக்கக்கூடியது. அவர் (உம்ரான்) துப்பாக்கியை போன்றவர். அவர் 160 கி.மீ வேகத்தை நெருங்குவதற்கு தன்னை உத்வேகப்படுத்துகிறார். என்னைப் பொறுத்தவரை இவை அனைத்தும் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு விமானம் புறப்படும் போது நீங்கள் எதை பார்க்கிறீர்கள். முதலில் அது ஒரு சீரான வேகத்தை எட்டிய பின் பறக்கும். அதேபோல் அவர் பேட்ஸ்மேனிடம் 35 மீட்டர் தொலைவில் இருந்து அதை அணுகுகிறார். அவர் தனது கைகால்களை தயார்படுத்திக்கொண்டு தடகள வீரரைப் போல ஓடி வந்து பயமுறுத்தும் வேகத்தில் வீசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது”

Lee

“அவர் ஒரு சில போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் 22 வயது மட்டுமே நிரம்பியவர். அவருக்கு என்னுடைய அட்வைஸ் என்னவெனில் எப்போதும் போல் ஓடி வந்து முடிந்த அளவுக்கு வேகமாக வீசுங்கள். ஏனெனில் அவரின் ஆக்சன் சிறப்பாக உள்ளதால் மாற்றத் தேவையில்லை. நிறைய பவுலர்கள் 140 கி.மீ வேகப்பந்துகளை வீசுவதற்கே திணறுகின்றனர். ஆனால் இவர் அசால்டாக வீசுகிறார். எனவே அவரை நான் முதல் முறையாக பார்க்கும் போது “நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை வழக்கமாக செய்யுங்கள் போதும்” என்று அறிவுரை வழங்குவேன்.

- Advertisement -

அவரின் ஆர்வமானது அவரின் முகத்திலும் வேககத்திலும் தெரிகிறது. அவரிடம் இயற்கையாகவே திறமை உள்ளது. அவரை நான் இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. இருப்பினும் தனது பள்ளிப்பருவத்தில் அவர் வேகமாக ஓடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

Umran

அதாவது விவேகம் இல்லாமல் ரன்களை வாரி வழங்குகிறார் என்று நிறைய பேர் கூறுவதைப் பற்றி உம்ரான் மாலிக் காதில் போட்டுக்கொள்ளாமல் எப்போதும் போல சிறப்பாகவும் முடிந்த அளவுக்கு வேகமாகவும் பந்துவீச முயற்சிக்க வேண்டும் என்று பிரட்லீ கேட்டுக்கொண்டுள்ளார். அவரை நேரில் பார்த்தாலும் அதைத் தான் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்து பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் பவுண்டரிகளால் மட்டுமே 100-க்கும் மேலான ரன்கள் எடுத்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

ஏனெனில் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் நாட்கள் செல்ல செல்ல தான் அனைத்தையும் கற்று கொள்வார் என்பதால் சுதந்திரமாக செயல்பட்டு முன்னேறுங்கள் என்பதே அவருக்கான தனது அட்வைஸ் என்று பிரட் லீ கூறியுள்ளார். இப்படி பாராட்டுக்களையும் முன்னேற்றத்தையும் கண்டு வரும் உம்ரான் மாலிக் ஐபிஎல் முடிந்தவுடன் சொந்த மண்ணில் பங்கேற்கும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement