ஐபிஎல் வரலாற்றில் பவுண்டரிகளால் மட்டுமே 100-க்கும் மேலான ரன்கள் எடுத்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

ABD-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் பேட்ஸ்மேன் – பவுலர் ஆகிய இருவருமே சம அளவில் மோதிக் கொண்டாலும் நிறைய தருணங்களில் பவுலர்களை புரட்டி எடுக்கும் பேட்ஸ்மேன்கள் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் ரன் மழையாக பொழிவதையே அதிகமாக பார்த்து வருகிறோம். அதில் நிறைய பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்ததும் ஓய்ந்து விடுவார்கள். சில தருணங்களில் மட்டுமே நிலைத்து நின்று பவுலர்களை வெளுத்து வாங்கும் பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்தும் திருப்தியடையாமல் தொடர்ந்து பவுலர்களை பந்தாடி சதமடித்து தங்களது அணியின் வெற்றிக்கு வித்திடுவார்கள்.

Virender Sehwag

- Advertisement -

அப்படி சதமடிக்கும் பேட்ஸ்மேன்கள் எடுக்கும் 100 ரன்களில் முக்கால்வாசி ரன்கள் பவுண்டரிகளின் வாயிலாகவும் எஞ்சிய ரன்களை சிங்கிள், டபுள் வாயிலாகவும் எடுப்பார்கள். அதிலும் கிறிஸ் கெய்ல், வீரேந்திர சேவாக் போன்ற பேட்ஸ்மேன்கள் “கவுண்டமணி கூறுவதுபோல யாருப்பா அசிங்கமா சிங்கள் எடுத்துகிட்டு” என்ற நோக்கத்தில் ஓடி ஓடி சிங்கிள், டபுள் ரன்கள் எடுப்பதை விரும்பாமல் பவுலர்கள் மனம் வருந்தினாலும் பரவாயில்லை என்று பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டே எளிதாக ரன்களை சேர்ப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் பவுண்டரிகள் (ஃபோர்ஸ்+சிக்ஸர்கள்) வாயிலாக அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

6. சனாத் ஜெயசூரியா (102): 2008 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 36-வது போட்டியில் சென்னை நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை துரத்திய சச்சின் தலைமையிலான மும்பைக்கு தொடக்க வீரராக களமிறங்கி பட்டைய கிளப்பிய இலங்கையின் சனத் ஜெயசூரியா 114* (48) ரன்கள் விளாசினார்.

Sanath Jayasuriya Robin Uthappa MI

அதனால் 13.5 ஓவர்களில் 158/1 ரன்களை எடுத்த மும்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 237.50 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 114 ரன்கள் எடுத்த அவர் 9 பவுண்டரி 11 சிக்ஸர்களின் வாயிலாக மட்டுமே 102 ரன்களை சேர்த்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

- Advertisement -

5. ரிஷப் பண்ட் (102): 2018 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 187/5 ரன்கள் சேர்த்தது. அதில் பிரித்திவி சா 9, ஜேசன் ராய் 11, ஷ்ரேயஸ் ஐயர் 3 ஆகியோர் சொற்ப ரன்களில் ஏமாற்ற மிடில் ஆர்டரில் மிரட்டலாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 128* (63) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

pant

அதிலும் 15 பவுண்டரி 7 சிக்ஸர்களின் வாயிலாக மட்டுமே 102 ரன்களை சேர்த்த அவர் இப்பட்டியலில் 5-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். இருப்பினும் ஷிகர் தவான் 92* (50) வில்லியம்சன் 83* (53) ஆகியோரின் அதிரடியால் டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

4. கிறிஸ் கெயில் (106): 2012 சீசனில் நடைபெற்ற 67-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவிடம் வசமாக சிக்கிய டெல்லி பவுலர்களை வெச்சு செய்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் அபாரமான சதமடித்து 128* (62) ரன்கள் நொறுக்கியதால் அந்த அணி 20 ஓவர்களில் 215/1 ரன்கள் சேர்த்தது.

ChrisGayle
Chris Gayle

அந்தப் போட்டியில் 7 பவுண்டரி 13 சிக்சர்களை பறக்க விட்ட அவர் அதன் வாயிலாக மட்டுமே 106 ரன்கள் சேர்த்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். அவரின் அற்புதமான பேட்டிங்கால் இறுதியில் பெங்களூரு 21 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

- Advertisement -

3. ஏபி டீ வில்லியர்ஸ் (112): 2016 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 44-வது போட்டியில் அப்போதைய சுரேஷ் ரெய்னாவின் குஜராத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 248/3 ரன்கள் சேர்த்தது. அதில் கெயில் 6 (13) ரன்களில் ஏமாற்றினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி 109 (55) ரன்களும் டீ வில்லியர்ஸ் 129* (52) ரன்களும் சேர்த்து 229 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடியாக சாதனை படைத்தனர்.

ABD

அதில் 248.07 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 129 ரன்களை எடுத்த டீ வில்லியர்ஸ் 112 ரன்களை 10 பவுண்டரி 12 சிக்ஸர்கள் வாயிலாக மட்டுமே அதிரடியாக சேர்த்தார். அவரின் அதிரடியால் அதன்பின் பெங்களூரு 144 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

2. ப்ரெண்டன் மெக்கல்லம் (118): இன்று சக்கை போடு போடும் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008இல் வரலாற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 158* (73) ரன்களை சரவெடியாக விளாசியதால் அந்த அணி 20 ஓவர்களில் 222/3 ரன்கள் சேர்த்தது.

அதிலும் 118 ரன்களை 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் வாயிலாக மட்டுமே தெறிக்கவிட்ட அவர் இன்றைய ஐபிஎல் எப்படி இருக்கப் போகிறது என்று அன்றே ரசிகர்களுக்கு காட்டினார். இறுதியில் அதை துரத்திய பெங்களூரு 82 ரன்களுக்கு சுருண்டதால் கொல்கத்தா 140 வித்தியாசத்தில் வென்றது.

1. கிறிஸ் கெயில் (154): 2013 ஏப்ரல் 23-ஆம் தேதியில் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாறும் காலத்திற்கும் தன்னை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெயில் சூறாவளியாக சுழன்றடித்து அன்றைய நாளில் சிக்கிய புனே வாரியர்ஸ் அணியை ருத்ர தாண்டவம் ஆடி வதம் செய்தார் என்றே கூறலாம். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 33-ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 263/5 ரன்கள் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தத அணியாக வரலாறு படைத்தது.

அதற்கு காரணம் அசோக் டிண்டா போன்ற புனே பவுலர்களை பிரித்து மேய்ந்த கிறிஸ் கெயில் ஒவ்வொரு பந்திலும் பட்டாசான பேட்டிங்க வெளிப்படுத்தி வெறும் 66 பந்துகளில் 175* (66) ரன்களை 266.15 என்ற தீயான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார். அதில் 154 ரன்களை 13 பவுண்டரி 17 சிக்சர் வாயிலாக மட்டுமே குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பவுண்டரிகளின் வாயிலாக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். அவரின் அதிரடியால் புனேவை காலி செய்த பெங்களூரு 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Advertisement