வெ.இ ஜாம்பவான்கள் க்ரீனிட்ஜ் – ஹெய்ன்ஸை இரட்டை குழல் துப்பாக்கியாக மிஞ்சிய விராட் – ரோஹித் ஜோடி, புதிய உலக சாதனை

Virat Rohit Partnership
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 13ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை முன்னாள் சாம்பியன் இந்தியா எதிர்கொண்டது. அதில் வெற்றியை பதிவு செய்தால் ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கடந்த போட்டியை போலவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் 19 ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 3 ரன்களில் அவுட்டாக்கிய துணித் வெல்லலேக் மறுபுறம் அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (48) ரன்கள் விளாசி சவாலை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவையும் தன்னுடைய மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கினார். அந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய கேஎல் ராகுலும் அவருடைய சூழலில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இரட்டைகுழல் துப்பாக்கி:
அதே போல மறுபுறம் போராடிய எசான் கிசான் 33 ரன்களில் அவுட்டாக ஹர்திக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4 என இதர பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் 49.1 ஓவர்களில் இந்தியா 213 ரன்கள் மட்டுமே ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக வெல்லலேக் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

முன்னதாக இந்த போட்டியில் 2வது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆனாலும் கடந்த 13 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய போட்டிகளில் டாப் ஆர்டரில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து எதிரணிகளை அதிரடியாக எதிர்கொண்ட அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியதை பற்றி ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

குறிப்பாக புள்ளி விவரங்களின்படி இதுவரை 86 இன்னிங்ஸில் 5008 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சௌரவ் கங்குலி – சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோருக்கு பின் 5000 பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர். அதை மிகவும் குறைந்த இன்னிங்ஸில் எடுத்துள்ள அவர்கள் உலகிலேயே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் டேஸ்மண்ட் ஹெய்ன்ஸ் – கோர்டான் க்ரீனிட்ஜ் சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: IND vs SL : சுழலால் சுருட்டிய இலங்கை 2 தனித்துவ வரலாற்று சாதனை- புதிய திட்டத்துடன் பந்து வீசும் இந்தியா வெல்லுமா?

அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ரோகித் சர்மா – விராட் கோலி (இந்தியா) : 86
2. டேஸ்மண்ட் ஹெய்ன்ஸ் – கோர்டான் க்ரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) : 97
3. ஆடம் கில்கிறிஸ்ட் – மேத்தியூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா) : 104
3. திலகரத்னே தில்சன் – குமார் சங்ககாரா (இலங்கை) : 104
4. ரோகித் சர்மா – ஷிகர் தவான் (இந்தியா) : 112
5. சௌரவ் கங்குலி – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) : 116

Advertisement