சச்சின் – கங்குலி ஆகியோரது 24 வருட பார்ட்னர்ஷிப் சாதனையை தூளாக்கிய இஷான் கிசான் – விராட் கோலி ஜோடி, 2 புதிய சாதனை

Virat Kohli Ishan Kishan
- Advertisement -

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வ்கையில் வங்கதேச மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே தொடரை இழந்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியது. சட்டக்கிரோம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 3 (8) அவுட்டாகி சென்றாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கை கோர்த்த இஷான் கிசான் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை தங்கமாக மாற்றி அதிரடியாக ரன்களை குவித்தார்.

IShan Kishan Virat Kohli

- Advertisement -

அதை புரிந்து கொண்ட விராட் கோலி ஒருபுறம் கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் வெளுத்து வாங்கிய இசான் கிசான் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கினார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அட்டகாசமாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்த கிசான் கிசான் அதை இரட்டை சதமாக மாற்றி 24 பவுண்டரி 10 சிக்சருடன் 210 (131) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாதனை ஜோடி:

அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 3, ராகுல் 8 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த விராட் கோலி தனது பங்கிற்கு 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 113 (81) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் 409/8 ரன்களை குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

Virat Kohli

அதைத்தொடர்ந்து 410 ரன்களை துரத்திய வங்கதேசம் இம்முறை ஆரம்ப முதலே தரமாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவரிலேயே 182 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை இழந்தாலும் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது.

- Advertisement -

1. முன்னதாக இப்போட்டியில் இஷான் கிசான் மற்றும் விராட் கோலி ஆகியோர் தனித்தனியே நிறைய சாதனைகளை படைத்தாலும் 290 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு எதிரணியின் சொந்த மண்ணில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலியின் 24 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தனர். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் – விராட் கோலி : 290, வங்கதேசத்துக்கு எதிராக, 2022*
2. சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி : 252, இலங்கைக்கு எதிராக, 1998
3. முகமது அசாருதீன் – அஜய் ஜடேஜா : 223, இலங்கைக்கு எதிராக, 1997

Virat-Kohli

2. இந்த இடத்தில் கங்குலி – ட்ராவிட் குவித்த 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்னாச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் அது 1999 உலக கோப்பையில் இங்கிலாந்து மண்ணில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டதாகும். மேலும் 9.15 என்ற அதிரடியான ரன் ரேட்டில் 290 ரன்களை குவித்த அந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் ரேட்டில் 250+ ரன்கள் பாரினர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையும் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு லீட்ஸ் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கையின் ஜெயசூர்யா – உபுல் தரங்கா ஜோடி 286 பார்ட்னர்ஷிப் ரன்களை 8.98 என்ற ரன் ரேட்டில் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: PAK vs ENG : நீங்கல்லாம் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டீங்க, 2வது டெஸ்டில் சொதப்பும் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

3. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமையும் அவர்கள் பெற்றனர். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் – ராகுல் டிராவிட் : 331, நியூசிலாந்துக்கு எதிராக, 1999
2. சௌரவ் கங்குலி – ராகுல் டிராவிட் : 318, இலங்கைக்கு எதிராக, 1999
3. இஷான் கிசான் – விராட் கோலி : 290, வங்கதேசத்துக்கு எதிராக, 2022*

Advertisement