IPL 2023 : ஏபிடி ஆல் டைம் சாதனை சமன் – சிஎஸ்கே போலவே அசத்தியும் கப் வாங்க முடியாத சோகத்தில் டு பிளேஸிஸ் – விராட் கோலி

Faf Du Plessis RCB
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் நடப்புச் சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இருப்பினும் இத்தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14 போட்டிகளில் 7 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து மீண்டும் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு பெரும்பாலான இதர வீரர்கள் சொதப்பிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீண்டும் தனி ஒருவனாக சதமடித்து 101* (61) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் சதமடித்து 104* (52) ரன்கள் விளாசி கொஞ்சம் கூட கருணை காட்டாமல் பெங்களூருவின் கனவை உடைத்தார். இருப்பினும் குஜராத் வென்றதால் நேற்று மதியம் ஹைதராபாத்தை தன்னுடைய கடைசி போட்டியில் தோற்கடித்த வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

சாதனை ஜோடி வீண்:
அதனால் வரலாற்றில் 16வது முறையாக தங்களுடைய முதல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு வெளியேறியுள்ளது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்றவர்கள் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடியும் ஏதோ ஒரு தருணத்தில் சொதப்பி வெற்றியை எதிரணிக்கு பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூருவுக்கு 2013முதல் கேப்டனாக பொறுப்பேற்று பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து வெறித்தனமாக போராடியும் விராட் கோலியும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

அதனால் விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை தொட முடியாது என்று சந்தித்த விமர்சனங்களால் பதவி விலகிய அவருக்கு பதிலாக 2018, 2021 சீசங்களில் சென்னை கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய டு பிளேஸிஸ் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு பெங்களூருவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை அணிக்காக கடந்த 5 வருடங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த அவர் வெளியேறியது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தாலும் பெங்களூரு அணிக்காக விஸ்வாசமாக செயல்பட்ட டு பிளேஸிஸ் 468 ரன்களை விளாசி முதல் வருடத்திலேயே பிளே ஆஃப் சுற்று வரை அழைத்துச் சென்று மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

அதை விட இதற்கு முன் சென்னை அணிக்கே அதிகபட்சமாக 2021 சீசனில் 633 ரன்கள் எடுத்து 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் பெங்களூரு அணிக்கு இம்முறை அதையும் மிஞ்சி 14 போட்டிகளில் 730 ரன்கள் குவித்து கேப்டனாக முன்னின்று வெற்றிக்கு போராடினார். ஆனாலும் இதர வீரர்களின் சொதப்பலால் முதல் கோப்பையை வெல்ல முடியாத அவர் நேற்றைய போட்டியில் மிகவும் சோகமடைந்தார். குறிப்பாக அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்றும் கோப்பையை வெல்ல முடியாததால் சோகமடைந்த அவருடைய முகத்தை பார்த்து பெங்களூரு ரசிகர்களை விட சென்னை ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதனால் இதே ரன்களை சென்னை அணியில் அடித்திருந்தால் இந்நேரம் நீங்கள் பிளே ஆப் சுற்றில் இருந்திருப்பீர்கள் என அந்த அணி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் காலங்காலமாக பெங்களூருவின் வெற்றிக்கு போராடி வரும் விராட் கோலி 639 ரன்கள் விளாசி தோல்வியை சந்தித்ததால் நேற்றைய போட்டியில் மனமுடைந்தார்.

- Advertisement -

அதை விட அந்த 2 மகத்தான பேட்ஸ்மேன்கள் ஜோடி சேர்ந்து இந்த சீசனில் 939 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளனர். அந்த பட்டியல்:
1. விராட் கோலி – பஃப் டு பிளேஸிஸ் : 939* (2023)
2. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ் : 939 (2016)
3. டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ : 791 (2019)

இதையும் படிங்க: BCCI : இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த பி.சி.சி.ஐ – வெளியான அறிவிப்பு

மொத்தத்தில் இதை பார்க்கும் ரசிகர்கள் எத்தனை மகத்தான பேட்ஸ்மேன்கள் வந்தாலும் யார் கேப்டனாக செயல்பட்டாலும் பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்பது தெரிவதாக பேசுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement