IPL 2023 : ஐபிஎல் வரலாற்றின் மாஸ் ஜோடியாக உருவெடுத்த கிங் கோலி – டு பிளேஸிஸ், ஹசி – ரெய்னாவை முந்தி படைத்த 3 சாதனை இதோ

Virat Kohli Faf Du Plessis
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்து அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் சிறப்பாக செயல்பட்டு சதமடித்து 104 (51) ரன்கள் குவித்த அதிரடியில் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை துரத்திய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலிருந்தே நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் டு பிளேஸிஸ் – விராட் கோலி ஆகியோர் ஹைதராபாத் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்த வாழ்வா – சாவா போட்டியில் பொறுப்புடன் செயல்பட்ட அவர்கள் நேரம் செல்ல செல்ல சிம்ம சொப்பனமாக மாறி 172 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100 (63) ரன்களும் டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (47) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதனால் 19.2 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த பெங்களூருவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக கடந்த 10 வருடங்களாக சென்னை அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த டு பிளேஸிஸ் 2018, 2021இல் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியும் கடந்த வருடம் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க தவறியது. அதை பயன்படுத்தி பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூரு அவரை தங்களது கேப்டனாகவும் நியமித்தது. அந்த வகையில் பெங்களூரு அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் அவர் கடந்த வருடம் முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று அசத்தினார்.

Virat Kohli 100

அதை விட முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சீசனில் சுமாராக செயல்பட்டும் போதிய ஆதரவு கொடுத்து சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் தொடக்க வீரராகவும் களமிறங்கி இந்த சீசனில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் குவித்த 172 ரன்களையும் சேர்த்த அந்த ஜோடி இந்த வருடம் மொத்தமாக 854 பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் 800 பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த முதல் ஓப்பனிங் ஜோடியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதை விட ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடி என்ற ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னர் சாதனையை தகர்த்த அவர்கள் ஐபிஎல் வரலாற்றின் புதிய மாஸ் ஜோடியாக சாதனை படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ஃபப் டு பிளேஸிஸ் – விராட் கோலி (பெங்களூரு) : 854* ரன்கள், 2023 சீசன்
2. ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னர் (ஹைதெராபாத்) : 791 ரன்கள், 2019 சீசன்
3. ருதுராஜ் கைக்வாட் – ஃபப் டு பிளேஸிஸ் (சென்னை) : 756 ரன்கள், 2021 சீசன்

மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த 2வது ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ் (பெங்களூரு): 939 ரன்கள், 2016 சீசன்
2. ஃபப் டு பிளேஸிஸ் – விராட் கோலி (பெங்களூரு) : 854* ரன்கள், 2023 சீசன்
3. ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னர் (ஹைதெராபாத்) : 791 ரன்கள், 2019 சீசன்

இதையும் படிங்க:SRH vs RCB : தோத்தது கூட பரவாயில்ல. இதை நெனச்சா தான் கஷ்டமா இருக்கு – எய்டன் மார்க்ரம் வருத்தம்

அத்துடன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதெராபாத் நகரில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ரெய்னா – ஹசி சாதனையை உடைத்து புதிய சாதனையும் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ஃபப் டு பிளேஸிஸ் – விராட் கோலி (பெங்களூரு) : 172, 2023
2. சுரேஷ் ரெய்னா – மைக் ஹசி (சென்னை) : 133, 2013
3. அம்பத்தி ராயுடு – லெண்டில் சிமன்ஸ் (மும்பை) : 130, 2014

Advertisement