SRH vs RCB : தோத்தது கூட பரவாயில்ல. இதை நெனச்சா தான் கஷ்டமா இருக்கு – எய்டன் மார்க்ரம் வருத்தம்

Markram
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Klaasen 1

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிளாஸன் 51 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரர் விராட் கோலி 100 ரன்களையும், கேப்டன் டூப்ளிசிஸ் 71 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில் கூறியதாவது :

Klaasen

நாங்கள் பேட்டிங்கின் போது மிகச்சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறோம். ஆனாலும் பவர் பிளேவில் இன்னும் சற்று கூடுதலாக ரன்களை குவித்திருக்கலாம். கிளாஸன் எங்கள் அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் ஆர்.சி.பி அணியின் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் அணியிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டனர். விராட் கோலி மற்றும் டூபிளெஸ்ஸிஸ் விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் இருந்தே அவர்கள் காட்டிய அதிரடி அவர்களது வெற்றிக்கு வழி வகுத்தது. இன்னும் சில இடங்களில் எங்களது முன்னேற்றத்தைக் காண நாங்கள் விரும்புகிறோம்.

இதையும் படிங்க : RCB vs SRH : அவங்க 200 ரன் அடிச்சிருந்தாலும் நாங்க திருப்பி அடிச்சிருப்போம். வெற்றிக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

இந்த போட்டியில் கிளாஸன் ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். அவர் அடித்த இந்த சதத்தை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் அவரது இந்த சிறப்பான செஞ்சுரி தோல்வியில் முடிந்தது சற்று வருத்தமானது தான் என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement