RCB vs SRH : அவங்க 200 ரன் அடிச்சிருந்தாலும் நாங்க திருப்பி அடிச்சிருப்போம். வெற்றிக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

RCB vs SRH

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக கிளாஸன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது :

19.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 100 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 71 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் :

Faf Du Plessis

இந்த சேசிங் மிகச்சிறப்பாக முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முதல் இன்னிங்ஸ் முடிந்து நாங்கள் பெவிலியனுக்கு திரும்பியதுமே இது நல்ல பேட்டிங் விக்கெட் என்று தெரிந்து கொண்டோம். நிச்சயம் இந்த மைதானத்தில் 200 ரன்கள் வரை அவர்கள் அடித்திருந்தாலும் சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

- Advertisement -

அதோடு ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் இந்த மைதானத்தில் பந்து திரும்பாததால் எங்களுடைய பேட்டிங் எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த வகையில் நானும் விராட் கோலியும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடினோம். இருவருமே வெவ்வேறு திசைகளில் விளையாடுவதால் எங்களுக்கு எதிராக பவுலர்கள் பந்து வீசுவது கடினம் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : வீடியோ : 103மீ மெகா சிக்ஸர், வியந்த டு பிளேஸிஸ் – கையில் தையலுடன் மிரட்டிய நாளில் மீண்டும் ஆர்சிபி’யை காப்பாற்றிய கிங் கோலி

அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த போட்டி எங்களது சொந்த மைதானத்தில் நடைபெற உள்ள வேளையில் அங்கும் இதேபோன்று ரசிகர்கள் எங்களை பெரிய அளவில் ஆதரிப்பார்கள் என்று நம்புவதாக டூப்ளிசிஸ் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement