இந்தமுறை வேர்ல்டுகப் ஜெயிச்சா இதுவரை யாரும் படைக்காத சாதனை பட்டியலில் இடம்பெற இருக்கும் – விராட் கோலி மற்றும் அஷ்வின்

Ashwin-and-Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரானது எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. உலகின் முன்னணி 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் எழுந்துள்ளது.

அதே வேளையில் இம்முறை முழுக்க முழுக்க இந்தியாவில் இந்த உலககோப்பை தொடரானது நடைபெற இருப்பதன் காரணமாக இந்திய அணியே கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக பலரது மதத்திலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி 1983-ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

இலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய வீரர்களின் யாரும் படைக்காத தனித்துவமான சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதனை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்தியா இரண்டு முறை உலக கோப்பையை வெல்லும் போது இரண்டு அணிகளிலும் இருந்த ஒரே இந்திய வீரர்கள் என விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் சாதனை படைத்த காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐசிசி உலக கோப்பை 2023 : இந்திய மண்ணில் எழுச்சி காணுமா.. நெதர்லாந்து அணியின் முழுமையான அலசல்

தற்போது விராட் கோலிக்கு 34 வயதும், அஸ்வினுக்கு 37 வயதும் ஆவதினால் அடுத்து இவர்கள் இருவருமே 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது எனவே இம்முறை இந்தியா கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் இவர்கள் இருவரும் மிக சிறப்பான சாதனையில் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement