ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு நட்சத்திர வீரர் வலைப்பயிற்சியின் போது காயம் – என்ன நடக்கப்போகுதோ?

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் மட்டுமே எஞ்சியிருந்த வேளையில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணி நிர்ணயத்தை 153 ரன்களை 19.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக சேசிங் செய்து இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ

- Advertisement -

இதனை தொடர்ந்து நாளை நவம்பர் 10-ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதி போட்டியானது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நவம்பர் 13-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

இந்நிலையில் அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மா காயம் அடைந்ததாக ஒரு தகவல் மற்றும் வெளியாகியது. ஆனாலும் காயத்திற்கு பிறகு மீண்டும் வலை பயிற்சியை பூர்த்தி செய்து ரோகித் சர்மா கட்டாயம் விளையாடுவார் என அவரே தெரிவித்திருந்தார்.

Virat Kohli

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரராக விராத் கோலி வலைப்பயிற்சியின் போது ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் விராட் கோலியின் காயம் தொடர்பான எந்த ஒரு முழு தகவலையும் பிசிசிஐ இதுவரை தெரிவிக்கவில்லை.

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வரும் விராட் கோலி இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அடிலெயிடு மைதானத்தில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ்களை அங்கு விளையாடி உள்ள விராட் கோலி 907 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 பைனல் : யார் வேணும்னாலும் பைனல்ஸ் வாங்க. ஆனா அந்த ஒரு விஷயத்துல உஷாரா இருங்க – வாசிம் ஜாபர் கருத்து

இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 3 சதம், 4 அரைசதம் அடித்திருக்கிறார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதமும் விளாசியுள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இரண்டு போட்டியில் விளையாடியுள்ள அவர் 154 ரன்கள் குவித்துள்ளார். இப்படி அடிலெயிடு மைதானத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் காயமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement