- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் கம்பேக் எப்போது? ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்தார். ஆரம்பத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது விராட் கோலியின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் காயத்தின் தன்மையை கணக்கில் கொண்டு அவர் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

விராட் கோலியின் கம்பேக் எப்போது? :

அப்படி விராட் கோலி நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து தற்போது விளையாடி வரும் விராட் கோலி இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டது அவரது ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தொடரை தவறவிட்ட விராத் கோலி எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 14-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அறிவிக்கும் என்றும் அப்போது விராட் கோலி இடம் பெறுவார் என்று உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஷிகர் தவானின் மாபெரும் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த சுப்மன் கில் – விவரம் இதோ

ஏற்கனவே காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ள விராட் கோலி தற்போது காயத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளதால் அவரது உடற்தகுதியை விரைவில் நிரூபித்து விட்டு தடையில்லா சான்றிதழை பெற்று அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -