ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோ நகரில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியானது 170 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதற்கடுத்து தங்களது கடைசி ஒருநாள் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் :
இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக மாறியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது அவர் அடித்த இந்த சதம் அவரது கரியரில் ஒன்பதாவது ஒருநாள் சதமாக பதிவாகியது. இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து முதல் இந்திய வீரராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்படி சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சுப்பன் கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்திருந்தார். இப்படி ஒருநாள் போட்டிகளில் அவர் தனது 9 சதங்களை அடிக்க 63 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க : சச்சின், விராட் கோலி, கங்குலி, டிராவிட் வரிசையில் 5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை
இவருக்கு முன்னதாக ஷிகர் தவான் தான் விளையாடிய 72-வது இன்னிங்ஸ்சில் 9 ஒருநாள் சதங்களை விளாசி இந்திய அணி சார்பாக அதிவேகமாக 9 சதங்களை விளாசிய வீரராக முதலிடத்தில் இருந்த வேளையில் அவரது சாதனையை 9 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே சுப்மன் கில் முறியடித்து முதல் இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



