- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிங் கோலி. வேற லெவல் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி 9:10 அளவிற்கு துவங்கவுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்திய ஆஸ்திரேலிய தொடர் குறித்த தகவல்களே அதிகளவு சமூகவலைதளத்தில் பரவுகின்றன. மேலும் பல்வேறு முன்னாள் வீரர்களின் கருத்துக்கள், கிரிக்கெட் வீரர்களின் கருத்துகள் என பலவற்றையும் நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.

இந்த தொடரில் இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்தும் பேசி வருகிறோம். அந்த வகை தற்போது இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு முக்கிய சாதனையை எதிர்நோக்கி பேட்டிங் செய்ய உள்ளார். ஆம் இதுவரை விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 248 போட்டிகளில் பங்கேற்று 11,867 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இந்த தொடரில் மேலும் 133 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் சர்வதேச அளவில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் ஆறாவது இடத்தைப் விராட் கோலி பிடிப்பார். அதுமட்டுமின்றி இவர் விரைவாக அதாவது 300 இன்னிங்சிற்குள் 12000 ரன்களை அடித்த வீரராக முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி 12000 ரன்களை குவித்த அனைவரும் அந்த ரன்களை குவிக்க 300 இன்னிங்ஸ்கள் மேல் எடுத்துக்கொண்டனர். ஆனால் கோலி இதுவரை 239 இன்னிங்ஸ்களை மட்டுமே விளையாடியுள்ளார். அதனால் விரைவாக 12000 ரன்களை குவித்த வீரராகவும் சாதனையை படைக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து இருக்கும் சச்சினின் சாதனையை குறிவைத்து சென்று கொண்டிருக்கும் கோலி இதுவரை 248 போட்டிகளில் 43 சதங்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை சமன் செய்ய இன்னும் ஆறு சதங்களே தேவைப்படும் நிலையில் சச்சினை முந்தி சென்று இன்னும் பல சதங்களை கோலி விளாசுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by