ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 7ல் தொடங்கவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுவென நடந்துவருகின்றன. பல முன்னனி நிறுவனங்கள் தங்கள் பொருட்களையும்,தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்திட போட்டி போட்டுக்கொண்டு ஐபிஎல்-இல் விளையாடும் அணிகளுடன் ஒப்பந்தம் போட்டுவருகின்றன.
கோடிகளை கொட்டி ஒப்பந்தம் போட்டுவரும் நிறுவனங்களை வரவேற்கும் அணிகளுக்கு பதில் 11கோடி ரூபாய்க்கு கோ-ஸ்பான்சராக பெங்களூரு அணியுடன் ஒப்பந்தம் போட தயாராக இருந்தது ஒரு டிராவல் ஏஜென்சி நிறுவனம்.
ஆனால் டிராவல் ஏஜென்சியின் ஒரெயொரு கோரிக்கையை விராட்கோலி ஏற்கமறுத்ததால் தற்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.11கோடி அளிக்க தயாராக இருந்த நிறுவனம் தனது பிரான்ட் அம்பாசிடரான தீபிகா படுகோனேவுடன் விராட்கோலி இணைந்து ஐபிஎல் விளம்பரங்களில் நடிக்கவேண்டும் என்றது.
ஆனால் விராட்கோலியோ அதெல்லாம் முடியாது. நான் மட்டும் தனியாக தான் நடிப்பேன். வேறுயாருடனும் சேர்ந்து நடிக்கமுடியாது. அது எனக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என்று நோ சொல்லிவிட்டாராம். இதனால் தான் பெங்களூரு அணிக்கும் அந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கான ஒப்பந்தம் நிலுவையில் நின்றுவிட்டதாம்.