டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 9வது முறையா.? சச்சின், கவாஸ்கர் மற்றும் VVS உடன் இணைந்த இந்திய வீரர்.!

இங்கிலாந்து அணிக்கு அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த கோலி 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் அவர் 97 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, கோலி இரண்டு இன்னிங்சிலும் அரைசதத்தை கடந்து மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். அவர் இப்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துள்ளார்.

half

கோலி இந்த போட்டியுடன் மொத்தம் “9 முறை” இரண்டு இன்னிங்சிலும் அரைசதத்தை கடந்துள்ளார். அதிக முறை இரண்டு இன்னிங்சிலும் அரைசதத்தை கடந்துள்ள இந்திய வீரராக, இந்திய அணியின் முன்னாள் வீரர் இந்திய அணியின் “சுவர்” என்று அழைக்கப்படும் டிராவிட் “10 முறை” அடித்து முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் கோலி இப்போது வந்துள்ளார் .

ஆனால், கோலி இந்த இரண்டாவது இடத்தினை இவர் முன்னாள் ஜாம்பவான்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது, இரண்டாவது இடத்தில் சச்சின் “9 முறை”, vvs லக்ஷ்மனன் “9 முறை” மற்றும் கவாஸ்கர் “9 முறை” ஆகியரை இவர் தற்போது சமன் செய்துள்ளார். மிக விரைவில் இவர்களை கடந்து முதலிடத்தில் செல்லும் வாய்ப்பு கோலியிடம் அதிகம் உள்ளது.

half 1

தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் கோலி, இன்னும் குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் . இதே பார்மில் அவர் விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை உடைத்து அவைகளை தன் வசப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.