இறுதி போட்டிக்கு முன்னர் விடுமுறை நாளை கொண்டாடிய கோலி அன்ட் கோ – வைரலாகும் புகைப்படம்

IND

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Iyer

அதற்கடுத்து விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவிக்க அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்களில் ஆட்டமிழக்க 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை 22 ஆம் தேதி கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒருநாள் இந்திய வீரர்களுக்கு ஓய்வுக்காக அணி நிர்வாகத்தால் விடுமுறை அளிக்கப்பட்டது.

அப்படி நேற்று 20 ஆம் தேதி கொடுக்கப்பட்ட விடுமுறை நாளை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சக வீரர்களுடன் கொண்டாடி அதனை புகைப்படமாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருடன் இந்திய அணி வீரர்களான ஐயர், ஜடேஜா, பண்ட், ஜாதவ், மனிஷ் பாண்டே மற்றும் ராகுல் ஆகியோர் உள்ளனர். கோலியின் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -