- Advertisement -
இந்திய கிரிக்கெட்

15 வருட சாதனை ஸ்பெஷல் கேரியரில் கிங் கோலி எவ்வளவு கி.மீ ஓடியுள்ளார் தெரியுமா? வியக்க வைக்கும் மாஸ் புள்ளிவிவரம் இதோ

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்து 15 வருடங்களை நிறைவு செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ஆரம்பத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் அசத்திய அவர் ஜாம்பவான் சச்சின் விடை பெற்ற 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கினார்.

அப்போதிலிருந்து கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 501* போட்டிகளில் 75* சதங்கள் உட்பட 25673* ரன்களை குவித்துள்ள அவர் இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாகவும் ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

510 கிலோ மீட்டர் மாரத்தான்:
அதற்கிடையே 2019க்குப்பின் 40, 70 ரன்கள் போன்ற நல்ல ரன்களை எடுத்தும் சதமடிக்காத ஒரே காரணத்தால் அணியை விட்டு வெளியேறுமாறு முன்னாள் வீரர்கள் விமர்சித்த போதிலும் மனம் தளராமல் போராடிய அவர் தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் சதம்டித்து தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல கேப்டனாகவும் 2014இல் சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் 2017 – 2021 வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெற்றிகரமாகவே செயல்பட்ட அவர் நல்ல ஃபிட்னஸ் கடை பிடித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையை உருவாக்கினார். அதை விட இந்தியா மட்டுமின்றி உலகிற்கே ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதன் காரணமாகவே 15 வருடங்களாக பெரும்பாலும் காயங்களை தவிர்த்து அவரால் வெற்றிகரமாக செயல்பட்டு வர முடிகிறது.

- Advertisement -

அத்துடன் ரசல், பொல்லார்ட் போன்ற காட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேன்களை விட ஃபீல்டர்கள் நிற்கும் இடைவெளிகளை பார்த்து தரையோடு தரையாக அடிக்கும் கிளாஸ் பேட்டிங்க்கை பயன்படுத்தியே டி20 முதல் டெஸ்ட் வரை ஆல் ஏரியாவிலும் அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக சராசரியை கொண்ட கில்லியாக செயல்பட்டு வருவது விராட் கோலியின் ஸ்பெஷலாகும். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எடுத்துள்ள 25673 ரன்களில் 13478 ரன்களை சிங்கிள், டபுள், ட்ரிபிள் என ஓடி ஓடியே விராட் கோலி எடுத்துள்ளதாக பிரபல ஈஎஸ்பிஎன்க்ரிக்இன்ஃபோ இணையம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

145 வருடங்கள் கடந்தும் கிரிக்கெட்டில் 2 வெள்ளை கோட்டுக்கு இடையேயான 22 யார்ட்ஸ் தூரம் மட்டுமே இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. அந்த 22 யார்ட்ஸ்களை 13748 முறை ஓடி ஓடி தொட்டு 13478 ரன்களை எடுத்ததன் வாயிலாக மட்டும் விராட் கோலி இதுவரை 276.58 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். அதே போல எதிர்ப்புறம் இருந்த போது தம்முடைய பார்ட்னர் பேட்ஸ்மேன்களுக்காக 11606 ரன்களை ஓடி விராட் கோலி எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:15 இயர் ஸ்பெஷல் : சாதனை கேரியரில் 510 கி.மீ ஓடினரா கிங் கோலி – ரசிகர்களை வியக்க வைக்கும் மாஸ் புள்ளிவிவரம் இதோ

இந்த வகையில் 233.48 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக தம்முடைய 15 வருட சர்வதேச கேரியரில் 25354 முறை 22 யார்ட்ஸ்களை ஓடி ஓடி தொட்டுள்ளார். அதாவது தம்முடைய 15 வருட கேரியரில் சிங்கிள், டபுள், ட்ரிபிள் ரன்கள் எடுப்பதற்காக மட்டும் இதுவரை விராட் கோலி 510.04 கிலோ மீட்டர் ஓடியுள்ளார் என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் தம்முடைய உலகத்தரம் வாய்ந்த ஃபிட்னஸ் பயன்படுத்தி அவர் சாதித்து காட்டியுள்ளார் என்றால் மிகையாகாது.

- Advertisement -