U-19 அறிமுக போட்டியில் விக்கெட் எடுத்து கலக்கிய சச்சின் மகன்..! வினோத் காம்ப்லி ட்விட்டரில் உருக்கம்..! – வீடியோ உள்ளே

sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சினின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் யு19 அணியில் சேர்ந்தவுடன் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுவதும் அவர் மீது தான் இருக்கின்றது. தற்போது இலங்கைக்கு யு19 அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி ட்விட்டரில் உருக்கமுடன் தனது பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்தியா யு19 அணி இலங்கைக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளைய்டி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்கியுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை யு19 அணி பேட்டிங் செய்து வருகிறது. சிறுது நேரத்திற்கு முன் இருந்த நிலவரப்படி இலங்கை யு19 அணி 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவிந்திருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் முதல் ஓவரை சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுகல்கர் வீசினர். முதல் ஒவேரில் விக்கெட் எதுவும் எடுக்காத அர்ஜுன் இரண்டாவது ஒவரின் கடைசி பந்தில் இலங்கை யு19 அணியின் வீரர் ஆர் வி கே மிஸ்ரா என்பவற்றின் விக்கெட்டை எல் பி மூலம் கைபற்றினார். தனது 12 வது பந்தில் முதல் விக்கெட்டை கைபற்றிய அர்ஜுனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் யு19 போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய அர்ஜுனுக்கு , முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்லி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார். அவரது சமீபத்திய டீவீட்டில் “இதனை கண்டதும் எனக்கு சந்தோஷத்தில் கண் கலங்கியது. உன்னுடைய உழைப்பை கண்டிருக்கிறேன். இது வெறும் துவக்கம் தான். நீ மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும். உன்னடைய முதல் விக்கெட்டிக்கு பாராட்டுக்கள். ” என்று அர்ஜுனுக்கு உருக்கமுடன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

Advertisement