வறுமையில் வாடும் சச்சினின் நண்பருக்கு கிடைத்த பதவி – கோரிக்கையை ஏற்று உதவி செய்த தொழிலதிபர்

Kambli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சச்சினின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன்படி இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் வீரராக இருந்தாலும் தற்போது தான் வறுமையில் வாடி வருவதாகவும், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் வழங்கப்படும் 30 ஆயிரம் மட்டுமே கொண்டு தனது வாழ்க்கை நடத்தி வருவதாகவும் வெளிப்படையாக தனது கஷ்டத்தை அவர் தெரிவித்தார்.

kambli

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானபோது முதல் ஏழு போட்டியிலேயே 793 ரன்கள் குவித்து அசத்திய அவர் அதில் இரண்டு இரட்டை சதங்களையும் அடித்திருந்தார். அவருடன் அறிமுகமான சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 சதங்கள் மற்றும் 24 ஆண்டுகள் விளையாடிய போதிலும் வினோத் காம்பிளியால் 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் நீடிக்காத வேளையில் தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கு கிடைத்துவரும் ஓய்வூதியமான 30 ஆயிரத்தினை வைத்துக்கொண்டே வாழ்க்கை நடத்தி வருவதாகவும் அதனால் தனக்கு யாராவது நல்ல வருமானம் வரும்படி ஒரு வேலையை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வெளிப்படையாக ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

Vinod Kambli

அவரது இந்த பேட்டிக்கு அடுத்து ரசிகர்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகினர். ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் ஒருவர் இப்படி வெளிப்படையாக தனது கஷ்டத்தை பகிர்ந்தது அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி அவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பினான்ஸ் பிரிவில் வினோத் காம்ப்ளிக்கு பணி வழங்குவதாக கூறி மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இந்த கோரிக்கைக்கு வினோத் காம்ப்ளீயிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இதையும் படிங்க : என்னுடைய இந்த முதல் சதத்தினை நான் அவருக்காக டெடிகேட் செய்கிறேன் – பூரித்துப்போன சுப்மன் கில்

இருந்தாலும் தற்போது அவர் தானாக முன்வந்து வினோத் காம்பிளிக்கு உதவியுள்ள இந்த செய்தி தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது. ஒருபக்கம் வினோத் காம்பிளியோ தனக்கு கிரிக்கெட் சார்ந்த பணி வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில் அவருக்கு பினான்ஸ் சார்ந்த பணி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement