IND vs WI : முதல் டெஸ்டில் அவர் ஆடிய பேட்டிங்கை பாத்து இளம் வீரர்கள் கத்துக்கனும் – விக்ரம் ரத்தோர் பேட்டி

Vikram-Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டோமினிக்கோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Ashwin

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 20-ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்த விதத்திலிருந்து இளம் வீரர்கள் எவ்வாறு ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது மைதானத்தில் பந்து சற்று அதிகமாக திரும்பியது. அதோடு சுழலுக்கு சாதகமாகவும் இருந்தது. அதேபோன்று நல்ல பவுன்சும் இருந்ததால் பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது.

Kohli

ஆனாலும் விராட் கோலி இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை அருமையாக எதிர்கொண்டார். விராட் கோலியின் இந்த அற்புதமாக ஆட்டம் இளம் வீரர்களுக்கு எவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியை அணுக வேண்டும் என்பதை எடுத்துக் காண்பிக்கும் விதமாக இருந்தது.

- Advertisement -

அதேபோன்று 182 பந்துகளை சந்தித்து வெறும் ஐந்து பவுண்டர்களை மட்டுமே அவர் அடித்திருந்தாலும் இது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ஒரு பேட்டிங் பயிற்சியாளராக எப்பொழுதுமே நான் வீரர்களின் ஆட்டத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் கோலி ஒரு அதிரடியான வீரர் தான். அவர் எப்போதுமே பவுலருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்.

இதையும் படிங்க : சீனியர் பிளேயர்ஸ் கசக்குறாங்களா? நாங்க இல்லாம அவங்களால சாதிக்க முடியாது – விமர்சனங்களுக்கு ரோஹித் பதிலடி

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு சூழ்நிலையை புரிந்து அவர் பொறுமையாக விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. வெவ்வேறு விதமான போட்டிகளில் எவ்வாறு சூழ்நிலைகளை கணித்து அதற்கேற்றார் போல் விளையாட வேண்டும் என்பதை கோலியிடமிருந்து இனிவரும் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement