சீனியர் பிளேயர்ஸ் கசக்குறாங்களா? நாங்க இல்லாம அவங்களால சாதிக்க முடியாது – விமர்சனங்களுக்கு ரோஹித் பதிலடி

Rohit-Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பெற்று 171 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகள் படைத்த இந்தியாவை வெற்றி பெற வைத்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Jaiswal-and-Rohit

- Advertisement -

அதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாராட்டிய நிலையில் அதே போட்டியில் தனது தரத்திற்கு நிகராக சதமடித்து 103 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவை அப்படியே நேர்மாறாக கலாய்த்தனர் என்றே சொல்லலாம். ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இப்படி இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்தார்.

ரோஹித் பதிலடி:
அதை விட சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்த அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் டி20 போலவே டெஸ்ட் அணியிலும் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனை நியமித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க தொடங்கியுள்ளனர்.

Jaiswal and Rohit

அத்துடன் இந்த தொடரில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை அடித்து என்ன பயன் என்று ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களை நிறைய இந்திய ரசிகர்களே வெளிப்படையாக கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென மொத்தமாக இளம் வீரர்கள் உள்ளே வந்து சாதித்து விட முடியாது என்று விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் அடுத்த தலைமுறை வீரர்கள் இன்று அல்லது நாளை என எப்போது வந்தாலும் அவர்களுக்கு தங்களைப் போன்ற சீனியர் வீரர்கள் அனுபவத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தான் சிறந்தவர்களாக உருவாக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே சீனியர் வீரர்களின் அனுபவமில்லாமல் திடீரென இளம் வீரர்களால் சாதித்து விட முடியாது என்று கூறும் ரோஹித் சர்மா வருங்கால இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு உதவி செய்வதற்கு தாங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பற்றி 2வது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

Rohit Sharma

“இந்திய அணியின் அடுத்த தலைமுறை மாற்றங்கள் என்பது இன்று அல்லது நாளை நிகழலாம். அந்த வகையில் தற்போது புதிதாக உள்ளே வந்தவர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் அவர்கள் எந்த வகையான வேலையை செய்ய வேண்டும் என்ற தெளிவை கொடுப்பது எங்களைப் போன்ற சீனியர்களின் வேலையாகும். அதை பயன்படுத்தி எப்படி தயாராகி எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அவர்களுடைய கையில் இருக்கிறது”

- Advertisement -

“அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று வளமான வருங்காலத்தை கொடுக்க போகும் இளம் வீரர்களை நாங்களும் சார்ந்திருக்கிறோம்” என்று கூறினார். மேலும் 2வது போட்டியில் பெரிய அளவில் விளையாடும் 11 பேர் அணியில் மாற்றம் இருக்காது என்று கூறிய அவர் பிட்ச்சை பார்த்து விட்டு முடிவெடுப்போம் என்று தெரிவித்து பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:சும்மா பேசாதீங்க குறை சொல்லாதீங்க, அதுக்காக வேணும்னே கேட்ச் ட்ராப் பண்ணுவாங்களா? அஷ்வினுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

“டாமினிக்காவில் நாங்கள் பிட்ச்சை பார்த்த பின்பு தெளிவான முடிவுகளை எடுத்தோம். இங்கே இதுவரை அந்த தெளிவு கிடைக்காத நிலையில் மழை பெய்யும் என்ற கணிப்புகள் காணப்படுகின்றன. ஆனாலும் நாங்கள் பெரிய மாற்றங்களை செய்யப் போவதில்லை. இருப்பினும் வானிலையை பொறுத்து அதற்கேற்றார் போல் சில மாற்றங்களை செய்ய உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement