இந்த தொடரின் 3 போட்டிகளை வைத்து அவரை முடிவு பண்ணாதீங்க. அவர் ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன் – விக்ரம் ரத்தோர்

Rathour
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் மூன்று போட்டிகளிலும் விளையாடி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்த அவர் அடுத்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும் இந்த சொதப்பலான ஆட்டத்திற்கு பிறகு இவரை இந்திய அணியின் துவக்க வீரருக்கான இருந்த இடத்தில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Wood

- Advertisement -

மேலும் இப்படி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ராகுல் தொடக்க வீரருக்கான இடத்தை இழக்கக் கூடும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதேபோன்று ராகுலை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இஷான் கிஷனுக்கு துவக்க வீரர் வாய்ப்பும், சூரியகுமார் யாதவ்க்கு மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ராகுல் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன் என்பதால் அவரை நீக்க முடியாது என்று தெளிவாக தனது ஆதரவை அவருக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோரும் ராகுல் குறித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

rahul

எல்லோரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி விட முடியாது. மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக ராகுலை குறைத்து மதிப்பிடக்கூடாது. டி20 கிரிக்கெட்டில் அவர் 40+ சராசரி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி எந்நேரத்திலும் அதிரடியாக விளையாடிய கூடிய ஆற்றலையும் அவர் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் அவரை விமர்சிக்காமல் அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். நிச்சயம் அவர் பழைய நிலைக்கு திரும்பி அதிரடி காட்டுவார் எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ராகுலின் தடுமாற்றத்துடன் காரணத்தை கூறிய அவர் : ராகுல் தற்போது சிறிய அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால் தான் அவரால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை என்றும் விரைவில் அதிலிருந்து வெளிவந்து கடுமையான பயிற்சி பெற்று அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று கூறியுள்ளார்.

Rahul

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ராகுல் போன்ற வீரர்கள் ஒரு பவுண்டரி அடித்து விட்டால் நிச்சயம் அடுத்து அழுத்தம் இன்றி எளிதில் விளையாடி ரன்களை குவிக்க முடியும் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுலுக்கு இப்போது தேவையானது போதுமான பயிற்சி மற்றும் கடின உழைப்பு தான் இதை இரண்டையும் செய்தாலே அவர் பழைய நிலைக்குத் திரும்புவார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement