இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு இவரே சரியானவர். அதற்கான அனைத்து தகுதியும் இவருக்கே இருக்கிறது – பேட்டிங் கோச் கருத்து

Rathour
- Advertisement -

இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடினாலும் நீண்ட நாளாகவே நான்காவது இடத்திற்கான சிக்கல் இந்திய அணிக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யுவராஜ் இருக்கும்வரை நான்காவது இடத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் யுவராஜின் நீக்கலுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப இந்திய அணி நிறைய வீரர்களை முயற்சி செய்தது. ஆனால் யாரும் அந்த இடத்திற்கு சரியாக அமையவில்லை.

Rayudu

- Advertisement -

குறிப்பாக நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு உலக கோப்பை தொடருக்கு முன்னர் திடீரென கழட்டி விடப்பட்டு அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை தவறான தேர்வாக அந்த இடத்தில் தேர்வு செய்தது. அதற்கு முன்னரும் ரெய்னா , மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என பல வீரர்களை சோதித்து பார்த்த நிர்வாகத்திற்கு எந்த ஒரு பலனும், முழு திருப்தியும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் நான்காவது வீரராக களம் இறக்கப்பட்டு சோதிக்கப்பட்டார். அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு தகுந்தவாறு தான் சிறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

Iyer-1

அதனை தொடர்ந்து தற்போது நான்காவதாக அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியாக விளையாடி வரும் அய்யருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில் :

- Advertisement -

நீண்ட நாளாகவே பெரும் விவாதப் பொருளாக இருந்த நான்காம் வரிசைக்கு தேவையான நியாயத்தை போதுமான அளவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் நிறைவு செய்துள்ளார். நான்காம் இடத்திற்கான சரியான தீர்வாக அவரது பேட்டிங் அமைந்துவிட்டது. டி20 கிரிக்கெட்டில் மணிஷ் பாண்டே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசத்துகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Iyer-1

ஒருநாள் போட்டிகளில் பொருத்தவரை ஐயர் எப்பொழுதும் நான்காவது இடத்தில் களமிறங்குவார் என்றும் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்றும் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement