அடுத்த 10 வருஷத்துக்கு இவரை யாராலும் அசைக்க முடியாது. இந்திய இளம்வீரரை பாராட்டிய – விக்ரம் ரத்தோர்

Vikram-Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டோமினிக்கா நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளிலேயே ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெறவுள்ளது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுக துவக்க வீரராக களமிறங்கிய இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

யாஷஸ்வி ஜெயஸ்வாலின் இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் மட்டும் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அடுத்த 10 ஆண்டுகளுக்கான வீரர் என்று கூறி அணியில் தக்க வைப்பேன். அந்த அளவிற்கு அவரிடம் திறமை உள்ளது.

Jaiswal

நிச்சயம் என்னைப் பொறுத்தவரை அவர் இனியும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்படுவார். நான் இதற்கு முன்னதாக அவருடன் பணியாற்றியது கிடையாது. ஆனால் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவருடன் பணியாற்றி வருகிறேன். ஐபிஎல் தொடரில் அவர் ரன்களை அடிக்கும் போதே அவர் அனைத்து வகையான கிரிக்கெட்க்கும் ஏற்ற பேட்ஸ்மேன் என்பதை புரிந்து கொண்டேன்.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்காகவும் அவர் அப்படிப்பட்ட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று விக்ரம் ரத்தோர் பாராட்டினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் ஆடுவது என்பது முக்கியம். அந்த வகையில் ஜெயஸ்வால் தனது முதல் 20 ரன்களை எடுக்க 90 பந்துகளை எடுத்துக்கொண்டு பொறுமையாகவே தனது இன்னிங்சை கட்டமைத்தார். அவரிடம் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் அளவிற்கு டெக்னிக் உள்ளது என்றும் விக்ரம் ரத்தோர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை தனியாளாகவே பந்தாடிய சாய் சுதர்சன், இந்தியா மாஸ் வெற்றி – செமி ஃபைனலில் மோதப்போவது யார்? விவரம் இதோ

அவர் கூறியபடியே அறிமுக போட்டியில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்திருந்தார். அதோடு கூடுதலாக சுப்மன் கில் குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவராலும் இந்திய அணிக்காக நீண்ட தூரம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியும் என விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement