பாகிஸ்தானை தனியாளாகவே பந்தாடிய சாய் சுதர்சன், இந்தியா மாஸ் வெற்றி – செமி ஃபைனலில் மோதப்போவது யார்? விவரம் இதோ

- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா ஏ அணி தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் அமீரகம் மற்றும் நேபாள் ஏ அணிகளை எளிதாக தோற்கடித்த நிலையில் ஜூலை 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் பரம எதிரி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே சாய்ம் ஆயுப்பை டக் அவுட்டாக்கிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அடுத்து வந்த யூசுஃப்பையும் டக் அவுட்டாக்கினார்.

அதனால் 9/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு பவர் பிளே முடிந்ததும் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயன்ற மற்றொரு தொடக்க வீரர் பர்ஹான் 35 (36) ரன்களில் அவுட்டாகி செல்ல கசிபுல்லா கான் 27 (55) கம்ரான் குலாம் 15 (31) கேப்டன் முகமத் ஹாரீஸ் 14 (13) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் காசிம் அக்ரம் 48 (63) முஹம்மது கான் 28 (38) மும்தாஜ் 25* (26) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் குறைந்த ரன்களில் போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

பந்தாடிய சுதர்சன்:
அதனால் 48 ஓவர்களிலேயே பாகிஸ்தானை 205 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 5 விக்கெட்டுகளையும் மாணவ் சுதர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 206 என்ற இலக்கை துரத்திய இந்தியா ஏ அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதில் அபிஷேக் ஷர்மா 4 பவுண்டரியுடன் 20 (28) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட சுதர்சன் அரை சதமடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தார். அவருடன் அடுத்ததாக வந்த நிகின் ஜோஸ் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்தார். அந்த வகையில் 31 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிகின் ஜோஸ் அரை சதம் கடந்து 7 பவுண்டரியுடன் 53 (64) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்று பாகிஸ்தானை பந்தாடிய சாய் சுதர்சன் சதத்தை நெருங்கிய நிலையில் அடுத்து வந்த கேப்டன் யாஷ் துள் அதிரடியாக விளையாடி வெற்றியை நெருங்கினார். அந்த நிலைமையில் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் 88 ரன்களில் இருந்த போது அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு இந்தியா ஏ அணிக்காக தன்னுடைய முதல் சதத்தை அடித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 36.4 ஓவர்களிலேயே 210/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றது.

அதை விட 10 பவுண்டரி 3 சிக்சருடன் 104* (110) ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் இந்தியா ஏ அணியை வெற்றி பெற வைத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவருடன் கேப்டன் யாஷ் தூள் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (19) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்ததார்.

இதையும் படிங்க:நான் முதல் முறையா யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாக்கும்போதே எனக்கு தெரிஞ்சிபோச்சி – ஏ.பி.டி மனம்திறந்த பாராட்டு

அப்படி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் குரூப் பி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அதன் காரணமாக குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த வங்கதேசத்தை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் எதிர்கொள்ள இந்தியா ஏ அணி தகுதி பெற்றது.

Advertisement