
இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுகிறது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளதால் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அதோடு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது குறித்த அச்சமும் காணப்படுகிறது. எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்கள் பலர் பங்கேற்ப இருப்பதால் இந்திய அணி அந்த தொடரில் எவ்வாறு செயல்படும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் விக்ரம் ரத்தோர் கூறியதாவது : எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு எளிதாக இருக்காது. ஏனெனில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூன்று வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
எனவே இந்த முறை இந்திய அணி இளமையான வீரர்களுடன் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இருக்கிறது. இப்படி அனைத்து விடயங்களும் சற்று சவாலான விடயமாக உள்ளது. குறிப்பாக சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளதால் நிச்சயம் இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மிகவும் கஷ்டப்படும்.
இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் சாம்பியன் யார்? சிறந்த அறிமுக வீரர் யார்? – கருத்து கணிப்பின் முடிவு இதோ
இருந்தாலும் இளம் வீரர்களுக்கு இந்த தொடர்பானது தங்களது திறமையையும், திறனையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனை எவ்வாறு அவர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளதாக விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.