அவங்க 2 பேரும் நிச்சயமா ரன்ஸ் அடிப்பாங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆதரவு

Vikram-Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்க இந்திய அணி காத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இரண்டவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பின்னடைவை தந்துள்ளது.

கே.எல் ராகுல் இடத்திற்கு ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரும் ஜடேஜாவின் இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். ஏற்கனவே இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மோசமான பார்மை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அவர்களது விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில் : நிச்சயம் அவர்கள் இருவருமே பெரிய ஸ்கோரை விளாச வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எனவே நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : கும்ப்ளே, சந்திரசேகரை முந்தி.. 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைக்க உள்ள 3 வரலாற்று சாதனைகள்

ஏனெனில் அவர்கள் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு போட்டிகளில் இன்னும் விளையாடவில்லை. நிச்சயம் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பெரிய ஸ்கோரை நோக்கி நகர்வார்கள் என விக்ரம் ரத்தோர் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement