எனக்கு இந்த வாய்ப்பு மட்டும் கொடுத்திருந்தா நான் வாட்சன் மாதிரி வந்திருப்பேன் – விஜய் ஷங்கர் வருத்தம்

Shankar

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரரான விஜய் சங்கர், அத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணிக்கு நான் மீண்டும் தேர்வாக வேண்டுமென்றால் அதற்கு அதிகமான உடலுழைப்பு தேவையென்றும் அதனால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாவதை பற்றி நான் யோசிப்பதில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி பேட்டியளித்திருந்த அவர்தான், இப்போது இந்திய அணியில் தான் தேர்வாகாமல் இருப்பதை நினைத்து தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அணியில் மீண்டும் தேர்வாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தமிழ்நாடு அணியை விட்டு வேறு மாநில அணிக்காக விளையாடப்போகும் முடிவைப் பற்றி யோசித்திருப்பதாக கூறியிருந்தார்.

Shankar-1

இந்த முடிவைப் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய தனியார் நாளிதழ் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகக் கடினமாக இருக்கிறது. நான், ஆம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த முடிவில் இதற்கு முன்பு நான் இருந்தது உண்மைதான் என்று கூறிய அவர். உலக கோப்பை தொடரில், இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தேர்வாகாமல் போனதிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், என்னை 3D ப்ளேயர் என்று இந்திய தேர்வுக் குழு கூறியதால், அம்பத்தி ராயுடு அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டை அப்போது பதிவு செய்தார். அந்த ட்வீட்டில் கருத்து தெரிவித்த ரசிகர்கள் அனைவரும் என்னை டேக் செய்ததால், தொடர்ச்சியாக நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும் கூறினார்.

- Advertisement -

அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக உலக கோப்பைக்கான இந்திய அணியல் இடம்பிடித்த அவர், அத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அதைப் பற்றி பேசிய விஜய் சங்கர், எனக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசை கிடைக்கவில்லை. நான் எப்போது களமிறங்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. அதெல்லாம், நான் விளையாடிய போட்டிகள் எந்த வகையில் செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைந்தது. இப்படி ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால்தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டுக் கொண்டார்.

shankar

இதைப் பற்றிய பேசிய அவர், நானும் ஷேன் வாட்சன் மற்றும் ஜாக்கியூஸ் கலீஸ் போன்ற ஒரு ஆல்ரவுண்டர்களில் ஒருவன்தான். ஆனால் அவர்கள் தங்களுடைய நாட்டிற்காக விளையாடும்போது, மூன்று அல்லது நான்காவது இடங்களில் தொடர்ச்சியாக களமிறங்கினர். எனவே தான் அவர்களால் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக மாற முடிந்தது. ஆனால் எனக்கோ அப்படி ஒரு நிலமை வாய்க்கவில்லை. ஆறாவது அல்லது ஏழாவது இடங்களில் நான் இறக்கி விடப்பட்டேன். சில போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த போட்டிகள் எல்லாவற்றிலும் நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்.

- Advertisement -

Vijay Shankar

மேலும் என்னை அம்பத்தி ராயுடுவுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர், அது அபத்தமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அம்பத்தி ராயுடு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். நான் லோயர் ஆர்டரில் விளையாடுகிறேன். இப்படி இருக்கும்போது என்னை எப்படி அம்பத்தி ராயுடுவிடம் ஒப்பிட முடியும் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் விஜய் சங்கர்.

Advertisement