பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர் காப்பி ஷாப்பில் வைத்து என்னை கழுவி ஊத்தினார்கள் – விஜய் ஷங்கர் பகிர்ந்த தகவல்

Shankar
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறாததால் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன விஜய் சங்கர் 2019 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Vijay Shankar

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : பாரத் ஆர்மி எனும் வலைப்பதிவில் பேசிய சங்கர் நாங்கள் வீரர்களில் ஒரு சிலர் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு முன்பு காபி ஷாப்பிற்கு சென்றோம். அதாவது அடுத்த நாள் பாகிஸ்தான் எதிரான போட்டிக்கு முன்னர் நாங்கள் அங்கு சென்ற போது பாகிஸ்தான் ரசிகர்களில் ஒரு சிலர் எங்களிடம் வந்து அத்துமீறி வார்த்தைகளை விட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேலும் தொடர்ந்து அவர்கள் வசைபாடிய பிறகு தான் எனக்கு புரிந்தது இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எந்த அளவு தீவிரமாக இருக்கும் என்று அந்த அளவிற்கு பாகிஸ்தானை ஆதரிக்கும் ரசிகர்கள் எங்களை வெறுத்து வசை பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களுடைய அனைத்து வார்த்தைகளையும் ஏற்றுக்கொண்டோம்.

Vijay Shankar

அவர்கள் எங்களை கண்டபடி ஏசினார்கள் அனைத்தையும் நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டு என்னதான் செய்கிறார்கள் என்று பேசாமல் கவனித்தோம். அந்த ஒரு நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. அதற்கடுத்த நாள் நான் அணியில் விளையாட போகிறேன் அதுவும் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அதற்கு பதில் என்னை களம் இறக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ஆயத்தம் ஆனேன் என்று விஜய் சங்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறிய அந்த போட்டியில் களமிறங்கிய விஜய் சங்கர் 15 ரன்களை குறைந்த பந்துகளில் எடுத்தார். மேலும் இந்திய அணி செட் செய்த 337 ரன்கள் என்ற பெரிய இலக்கினை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணியை இந்திய அணி சிறப்பாக சுருட்டி வெற்றி பெற்றது இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் பௌலிங் செய்யும்போது காயமடைந்து வெளியேறியதால் மீதமிருக்கும் ஓவரை முடிக்க அறிமுக பந்து வீச்சாளராக அந்த ஓவரை வீசினார்.

Shankar 1

மேலும் விஜய் சங்கர் முதல் பந்து வீசும்போதே விக்கெட்டையும் எடுத்து அசத்தினார், அதன் மூலம் உலக கோப்பை தொடரில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த மூன்றாவது அறிமுக வீரர் என்ற சாதனையை பட்டியலும் விஜய் சங்கர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement