வேர்ல்டுகப் கிட்ட வரதால வேலையை காட்டுறாரா விஜய் ஷங்கர். ரசிகர்கள் கலாய்ப்பு – நல்லா விளையாடுனாலும் இப்படியா?

Vijay Shankar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின, அதன்படி இந்த போட்டியில் ராசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

Gurbaz

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் 24 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 51 ரன்கள் குவித்து அசத்தினார்.

Vijay Shankar and Miller

அவரது இந்த அசத்தலான ஆட்டம் குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு சேர்த்து அவருக்கு பாராட்டினையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே அவர் இதுவரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் சங்கரின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு அவர் மீது ரசிகர்கள் சில கிண்டலான கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான நான்காவது வீரருக்கான இடத்திலிருந்த ராயுடுவிற்கு பதிலாக 3 டைமென்சன் வீரர் என்று கூறி இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் அதை தொடர்ந்து இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த விஜய் சங்கர் மீண்டும் உலகக் கோப்பை அருகில் வருவதால் தன்னுடைய முழு திறனையும் வெளிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : KKT vs GT : தமிழக வீரரை பந்தாடி குஜராத்துக்கு மிரட்டல் ஃபினிஷிங் கொடுத்த விஜய் சங்கர் – கொல்கத்தாவுக்கு பதிலடியுடன் முதலிடம்

அதோடு நான்காவது இடத்தில் தற்போது இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் அணியில் இருந்து வெளியேறியிருப்பதால் அந்த இடத்தினை பிடிக்கவே விஜய் சங்கர் இதேபோன்று ஆடி வருகிறார் என்றும் ரசிகர்கள் விளையாட்டாக சில கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement